இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம்
ஜீவனுள்ள நாட்களெல்லாம் உயர்த்திடுவோம்
கர்த்தர் செய்த நன்மைகளை
சொல்லி சொல்லி மகிழ்ந்திடுவோம்
நீங்க தொட்டாலே அற்புதம்
நீங்க பார்த்தாலே அதிசயம்
நீங்க பார்த்தாலே போதுமையா
தேடி வந்தவரும் நீங்க தானய்யா
என்னை வாழவைத்த வரும் நீங்க தானைய்யா
உங்க இரக்கத்துக்கு முடிவேயில்லை
உங்க அன்புக்கு அளவேயில்லை
நீங்க அன்பாலே நிறைந்தவர்
பாசத்திலே உயர்ந்தவர்
அற்புதருமானவரைய்யா
சர்வ வல்லவரும் நீங்க தானைய்யா
என்றும் ஆட்சி செய்பவரும் நீங்க தானய்யா
உங்க இராஜ்ஜியம் மாறுவதில்லை
உங்க வல்லைமை குறைவதுமில்லை
நீங்க ராஜாதி ராஜனாம்
தேவாதி தேவனாம்
கர்த்தாதி கர்த்தனுமைய்யா