ஜீவனேசு கிருபாசன்னா எனின்
சிறுமை தீர்த்தருள் ஓசன்னா
காவில் ஆதஞ் செய் பாவமூடவே
கடிய பேய் நரகோடவே
பூவுள்ளோருமைப் பாடவே பரி
பூரண க்ருபை நீடவே
தொண்டர் பாதக ரண்டகங் கெட
துயரமேபடும் அத்தனே
தொண்டன் நின் சரணண்டினேன் எனின்
நோயைத் தீர் பரிசுத்தனே
அடியர் அடி பெற அலகை அழல் விழ
அரிய பொன்முடி கொடுபட
படியில் நான் படுங் கொடிய விடர் கெட
பலது தீமையு முறிபட