கண்மணிபோல் என்னை காக்கின்றீர்
கரம் பிடித்து நித்தம் நடத்துவீர்
மறவாத உம் அன்பின் ஆழத்தில்
மாறாத உம் கிருபையாலன்றோ
கண்மணிபோல் என்னை காக்கின்றீர்
கரம் பிடித்து நித்தம் நடத்துவீர்
காக்கின்றீர் என்னை காண்கின்றீர்
ஓயாமல் என்னை நினைக்கின்றீர்
தூங்காமல் என் நினைவாலே நித்தம் சுமக்கின்றீர்
வாக்குரைத்தவர் மறப்பதில்லை
மாற உம் வாக்கின் உண்மை
உம் அநாதி சிநேகத்தாலே
என்னையுமே நீர் சிநேக்கித்தித்தீரே
பேரன்பின் காருண்யத்தாலே
உம் அன்பாலே இழுத்துக்கொண்டீர்
உம் அநாதி சிநேகத்தாலே
என்னையுமே நீர் சிநேக்கித்தித்தீரே
என் உள்ளத்தில் விசாரம் பெறுகையில்
உம் ஆறுதல் என்னைத் தேற்றுமே
கால் சறுக்கும் என நினைத்தாலே
உம் கிருபை என்னைத்தாங்குமே
என் உள்ளத்தில் விசாரம் பெறுகையில்
உம் ஆறுதல் என்னைத் தேற்றுமே
ஜீவமார்கம் எனக்குத்தந்தீர்
உம் சமூகமே நித்திய ஆனந்தம்
ஒரேதரம் பலியானீர் அன்றோ
என்னென்றும் என்னை பூர்ணமாக்கினர்
ஜீவமார்கம் எனக்குத்தந்தீர்
உம் சமூகமே நித்திய ஆனந்தம்
DOWNLOAD PPT