கர்த்தருக்குக் காணிக்கையிதோ தம்மையே தந்த
கர்த்தருக்குக் காணிக்கை இதோ
கர்த்தருக்குக் காணிக்கையாய்ப்
பத்திலொன்று நான் கொடுப்பேன்
சத்தியக் கிறிஸ்து நாதர்
சபையை வர்த்திக்கவேணும்
அநியாயம் நீங்க வேணும் உலகிலே மெய்
அறிவு வளர வேணும்
தனியேக மெய்த்தேவனை நந்தேசத்தில்
சகலரும் போற்ற வேணும்
கனிவாய்ப் போதகர் வேதம்
கற்றறிந்து சொல்லவேணும்
கணக்காய் இதன் செலவு
கட்டி வரவேணும் அய்யா
ஆபிரகாம் பத்திலொன்றையே மெல்கிசே தேக்குக்கு
அனைத்திலும் தந்ததையே
மா பிரியமாக வாசித்தேன் இஸ்ரயேல் பெத்தேல்
வள்ளற்குச் செய்பொருத்தனையே
ஆண்டவர் பரன் அவர்கட்
கனைத்தும் ஆசீர்வதித்துத்
தாபரம் மதடி கீழ்த்
தந்தளித்த தெல்லாங் கேட்டேன்
கொஞ்சங் கொஞ்சமாகச் சேர்த்தேன் இதோ இத்தனை
கூடினதைக் கொண்டிதோ வந்தேன்
நஞ்சைவிளைவினி லோர்பாகம் சேர்த்து வைத்தேனான்
நாலாவகை வரத்திற் கொஞ்சம்
புஞ்சை பல போகத்திலும்
போட்டு வைத்தே னான்குறுணி
புத்தகக் கணக்கில் கண்ட
தித்தனை தொகையுமாச்சு