கவலை வைக்காதே மகனே நீ
கவலை வைக்காதே
கவலைவைத்திந்த உலகை நாடி
அபலமான வரனந்தங் கோடி
பெற்ற பிதா நமக்கொன்று அவர்க்
குற்ற செல்வம் நமக்குண்டு
உத்தம வேலை கைக்கொண்டு செய்ய
உனக்கென்ன குறையுண்டு
என்ன நான் புசிப்பேனின்று நாளை
என்ன நான் குடிப்பேனென்று
இன்னும் வீண்கவலைகொண்டு தினம்
ஏங்கிறாய் எப்பலனுண்டு
காகங்களை நோக்கிப்பாரு நல்ல
களஞ்சியமுண்டோ வேறு
தாகம் பசிக்கவைக்காரு இரை
தருகிறாரென்று கூறு
புல்லும் பூண்டும் காட்டில் வளரும் பிழைப்
பூட்டுவ ராரென்று கழறும்
பொல்லாக் கவலையாற்றழலும் மனம்
பொறுமையில்லாமல் அலறும்
உடையின் கவலையாலே மனம்
உடையுமே பல வேளை
முடியுமோ உந்தனாலே அல்ல
முற்றுமது பிதாவேலை
கானகலீலிப் பூப்போலே கன
ஞானி சாலமோன் தன் மேலே
பூணவில்லையாகையாலே பிதா
புல்லுக்குடுத்து மாப்போலே
கவலைப்பட்டோர் முழம் கூட்டும் நரன்
காசினியிலுண்டோ காட்டும்
குவலயமெல்லாம் போற்றும் இயேசு
கோமான் திருமொழிகேட்டும்