கிருபை எந்தன் வாஞ்சை
கிருபை இப்போ தாரும்
பெலனில்லா நேரத்தில் உம் கிருபை
பெலவானாய் என்னை மாற்றிடுதே
தனிமையில் நான் செல்லும்போது
தயவாய் என்னை தாங்கிடுதே
நீர் மாத்ரம் எனக்கு போதுமையா
உலகம் எனக்கு வேண்டாமையா
உம்மை என் முன் நிறுத்தனுமே
உந்தன் பின்னே செல்லனுமே
நீரே எந்தன் தஞ்சம் ஐயா
வேறொரு புகலிடம் இல்லை ஐயா
சோதனைகளை ஜெயிக்கனுமே
உந்தன் பின்னே நடக்கனுமே