கொஞ்ச காலம் இயேசுவுக்காக
கஷ்டப்பாடு சகிப்பதினால்
இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
இயேசுவை நான் காணும் போது
அவர் பாதம் வீழ்ந்து பணிந்து
ஆனந்த கண்ணீர் வடிப்பேன்
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
அந்த நாடு சுதந்தரிப்பேன்
1. கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை
கடந்தென்று நான் மறைவேன்
ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே
தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார்
2. இந்த தேகம் அழியும் கூடாரம்
இதை நம்பி யார் பிழைப்பார்
என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டு
இயேசுவோடு நான் குடியிருப்பேன்
3. கனவான்கள் பாக்கியவான்கள்
கர்த்தருக்குள் மரிப்பவர்கள்
கிறிஸ்தென் ஜீவன், சாவு என் ஆதாயம்,
காணுவேனென் பிதா முகமே
4. வீணை நாதம் தொனித்திடும் நேரம்
வரவேற்பு அளிக்கப்படும்
என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார்
எனக்கானந்தம் பொங்கிடுமே
5.பலியாக காணிக்கையாக
படைத்தேனே உமக்காக
என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசு ஆண்டவரே
ஏழை நான் என்றும் உம் அடிமை
DOWNLOAD PPT
Konja Kalam Yesuvukaga song lyrics chords ppt By Pas karthi c Gamaliel, Konja Kalam Yesuvukaga song, Konja Kalam Yesuvukaga Song Lyrics