மலையாதே நெஞ்சமே இப்படி நம்மை
வகுத்தவனே தஞ்சமே
அலையாதருள் மந்த்ர கலையாகம சுந்த்ர
அருத்தப் பண் கருத்தர்க்கென்
றுரித்தல் கொண் டிருத்திக்கொள்
கருத்தர் கட்டுவதல்லோ வீடு நரர்
கட்டும் கிரியைகள் வீண் பாடு
வருத்தப்படுவதென்ன கேடு பேயின்
மயக்கமெல்லாம் விட்டுப்போடு
தரித்திரத் திரள் இக்கட்டு பெருத்த கவலைப்பட்டுச்
சலியாதிரு நலியாதிரு
தந்தையார் சுதன் வந்த நாள் இது
எண்ணத்தினால் என்னகூடும் தெய்வம்
இட்டதல்லோ வந்து நீடும்
மண்ணைச் சதம் என்றெண்ணி வாடும் மக்கள்
மனதில் துயரம் வந்து மூடும்
கண்ணைத் திறந்து நோக்கு விண்ணைச் சிறந்துள்ளார்க்குக்
குருத்தாய் இரு உரித்தாய் இரு
குருத்தரானவர் ஒருத்தரே துணை
என்ன கவலைப்பட்டும் நஷ்டமே கிறிஸ்
தேசு பிறந்ததுன் அதிஷ்டமே
உன்னதன் பண்ணின திட்டமே உனக்
கொழுங்கு ப்ரமாணத்தின் சட்டமே
பின்னப்பட் டுலையாதே சின்னப்பட் டலையாதே
பெருத்த நாள் இது கருத்தர்நாள் இது
பெலப்பாய் இரு கெலிப்பாய் இரு
DOWNLOAD PPT