நேசபரனைத் துதிப்பாய் ஓ நெஞ்சமே
தாசன் புவியோரில் மா நீசனென்னைப்பிடித்த
மோசம் நிவிர்த்தி செய்த யேசுக்ருபாசமுத்ர
மரணம் பிடித்துமென்னை வல்லவன் விடுத்தார்
வலிய பாதாளம் நின்றே மகிமையா யெடுத்தார்
சரணமென்றே புது உயிர்தனைக் கொடுத்தார்
சத்ரு எனக்குச் சேதம் புரியாது தடுத்தார்
பாதக னெனக்குண்டோ கொஞ்சமும் பாத்திரம்
பரனருள் நன்மைக் கிப்பாவி எம்மாத்திரம்
தீதன் ருசித்த நலம் அன்பு மா காத்திரம்,
செப்புவேன் இங்குமங்கும் எனியனின் தோத்திரம்
அடியனுக்கவர் செய்த அன்புரைத்தாமோ
ஆயிரம் நாவினால் சொல்வது போமோ
இடிதனைத் தாங்கிட மனிதரா லாமோ
இயேசெனைத் தாங்கையில் என்னுயிர் போமோ
உள்ளும் புறம்புமான எந்த வில்லங்கம்
உலகிலெனக்கு வரும் எவ்விதப் பங்கம்
தள்ளியே காத்திடும் தகும் யூதா சிங்கம்
தாரணியினில் தனக்கிணையிலாத் தங்கம்