நிறைவுற வரந்தா நியமகம்
நிறைவுற வரந்தா
நித்திய திரித்துவ சத்தியபரா என்றும்
உரிய தொண்டருக்கில்லமே இங்கு
உண்டமைக்கும் எங்கள் தெய்வமே
உன் திருத்தாளரண் எங்களுக்குகே சரண்
ஆதம் தனித்த நிலையது நல்ல
தல்லவென்று கண்டவனது
அங்கமே நின்றொரு மங்கையே தந்தனை
ஆபிரகாம் எலியே சரும் மன்
றாடிய வேண்டுதல் கேட்டொரு
அங்கனை நெஞ்ச மிணங்க வகை செய்தாய்
உலகம் பேயுடல் முப்பகை இவர்
ஓப்பந்தத் தீண்டா துனது கை
ஓங்கியே தாங்கி யுறுதுணை தந்துமே
ஒப்பந்தத் தாலிரு சார்பினர் தமை
உற்றவர் மற்றவர் நற்றவர்
உன்னதா சீரடைந்துன் மகிமை தர