ஒரு கண்ணுக்கும்
தயை தோன்றாமல் இருந்தாலும்
ஒரு செவிகளும் என் புலம்பலை
கேட்காமல் இருந்தாலும்
என் அழுகையின் சத்தம் கேட்கும்
தேவனே
என் நிலைமைகள் நன்றாக தெரியும்
இயேசுவே
நீர் என்னை கைவிடமாட்டீர்
புறக்கணிக்க மாட்டீர்
கஷ்டநாட்களில் என்னோடு
கூட இருந்திடுவீர்
பெலனில்லாதோர்க்கு பெலனை
கொடுக்கும் தேவன்
சோர்ந்து போனோர்க்கு பெலனை
கொடுக்கும் தேவன்
இளைஞர்கள் இளைப்படைந்து
போனாலும்
வாலிபர்கள் இடறி விழுந்தாலும்
நான் கர்த்தருக்கு காத்திருந்து
புதுபெலன் அடைந்து
கழுகை போல் சிறகடித்து
உயர்ந்திடுவேன்
கானான் நாட்டிலே
ஆசிர்வாதத்தால் என்னை
ஆசிர்வதிப்பாரே உயர்த்திடுவார்
என் தேவன்
தம் வாக்குதத்தம் நினைவு
கூர்ந்திடும் தேவன்
தகுதியில்லா இடங்களிலும் அவர் என்னை
உயர வைத்திடுவார்
என் பெயர் பெரிதாக்கிடுவார்
என் கண்களினால் அவர்
மகிமை கண்டிடுவேன்
Oru Kannukum Thayai Thondramal, Issac william songs, tamil christian songs lyrics & PPT, oru kannukum, Issac William-ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல்