பார்க்க முனம் வருவேன்;-நெருக்கத்தில்
பத்ரமாகத் கரிசித்த மேசியாவை.
ஆர்க்கும் இரங்கும் பராபரனின் சுதன்
அன்பின் மனுடவ தாரத்தைச் சிந்தித்து,
நிச்சய சாதாரண சத்திய வேதனை,
நின்மல ஞான வரப்பிரசாதனை,
உச்சித வாக்ய சுவிசேட போதனை,
உன்னத ரட்சகர் கிறிஸ்தேசு நாதனை,
முற் பிதாக்கள் விரும்பிய தேட்டம்,
முன்னே ஆதிப் பிதாவின் சிரேட்டம்,
எப்பு விக்கும் எவர்க்கும் கொண்டாட்டம்,
எந்தையின் சுதன் மேல் என்றன் நாட்டம்.
ஆசைக் கிறிஸ்துண்மை யான நல் ஆயனை,
ஆத்தும நாயகர் ஆன என் நேயனை,
பாச வலையில் கை தூக்கின நாயனை,
பக்ஷ மொடு காத்த முக்ய சகாயனை.
ஆச்சரிய மான நேசத்தை, பாசத்தை,
அன்பின் திருமுகத்தை, ஐந்து காயத்தை,
காட்சி தரும் இரு பாதத்தைப், பாவியைக்
கைதூக்கி விட்ட கரத்தை, உரித்தாக
DOWNLOAD PPT