Paavi Indrae Keerthanai Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song

பாவி இன்றே திரும்பாயோ நேச
ஆவியின் சத்தம் கேளாயோ

மேவி தயை நிரம்பி ஏவி உனை விரும்பிக்
கூவி அழைக்கையிலே தாவி யேசுவை நோக்கி

பாவம் தொடர்ந்து செல்லுமே பாவ
சாபம் அடர்ந்து கொல்லுமே உனின்ப
லாபம் எல்லாமே சாபம் காலமிதுவே காலம்
தாபம் உளவுன் யேசு மா பரிதாபம் கண்டு

எத்தனை போதனை பெற்றாய் ஐயையோ
சுத்தமாய்ச் சாதனை அற்றாய் என்றாலும்
அத்தனை பாவத்தையும் முற்றுமாக வெறுத்து
அத்தனே தத்தம் செய்தேன் நித்தமும் காவுமென்று

கல்வாரியில் தொங்கினோர் யார் உனக்
கல்லோ நேசர் ஏங்கினோர் பார் இன்னும்
பொல்லா மனதுடனே கல்போல் கடினமாகிச்
செல்வோரையும் நிந்தித்து எல்லாக் கேட்டுக்குள்ளான

நிலை யின்றலை கின்றோரே ரத்த
விலை மதியாமல் சென்றோரே போதும்
மலையாமல் யேசுவிடம் தொலையாத கவலை சொல்லி
உலையா நம்பிக்கை வைத்து நிலையான ரட்சைபெற

DOWNLOAD PPT

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

APOSTLE PAUL HISTORY

அப்போஸ்தலன் பவுல் வரலாறு போதகரும் ...
Read More

DAVID LIVINGSTONE LIFE HISTORY

இருண்ட கண்டம் வெளிச்சம் ஆயிற்று ...
Read More

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE