Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, porpu migum songs, porpu migum songs lyrics

PORPU MIGUM KEERTHANAI SONG LYRICS CHORDS PPT TAMIL CHRISTIAN KEERTHANAI SONG

சீயோன் 1 பொற்பு மிகும் வானுலகும்
பூவுலகும் படைத்த பரப்பொருளே,-இங்கே
பொந்திப்பிலாத் தரண்மனையில்
வந்து நிற்கும் காரணமேன், கோவே?

கிறிஸ்து கற்பனை மீறிய பாவத்தால்
கடின நரகாக்கினைப் படாமல்-உன்னைக்
காப்பதற் கிங்கே ஞாய‌
தீர்ப்பில் உற்றோம், சீயோனின் மாதே.

சீயோன் 2 துய்ய திரு மேனி எல்லாம்
நொய்ய உழுத நிலம்போல ஆகி,-உன்‌
சோரி சிந்த, வாரதினால்
நீர் அடிக்கப்பட்டதென்ன, கோவே?

கிறிஸ்து வையகத்தின் பாதகத்தால்
பெய்யும் நடுதீர்வையெல்லாம் ஆற்ற,-இந்த‌
வாதை எல்லாம் பட்டிறக்க‌,
போத மனம் சம்மதித்தோம், மாதே.

சீயோன் 3 செய்ய கண்கள் உறச் சிவந்து,
திருக் கன்னங்கள் தடித்து, மிக வீங்கி,-முழுச்
சென்னியின் ரோமங்கள் எல்லாம்
வின்னமுற்றிங் கிருப்பதென்ன, கோவே?

கிறிஸ்து மையிருளில் குருக்களுடை
மாளிகையில் படுத்தின பாடெல்லாம்-இங்கே
வன் கொலைஞரால் அடிக்க‌,
பங்கமுற்ற கோலம் இது, மாதே

 

DOWNLOAD PPT

 

Songs Description:
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, porpu migum songs, porpu migum songs lyrics
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE