Rajathi Rajan Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song

ராசாதி ராசன் யேசு யேசு மகா ராசன் அவர்
ராஜ்யம் புவியெங்கு மகா மாட்சியாய் விளங்க
அவர் திரு நாமமே விளங்க அவர் திருநாமமே விளங்க
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலுயாவே
அல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலுயாவே

உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்
மன்னன் யேசுநாதருக்கே வான்முடி சூட்டுங்கள்

நாலாதேசத் திலுள்ளோரே நடந்து வாருங்கள்
மேலோனேசு நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்

நல்மனதோடு சொல்கிறேன் நாட்டார்களே நீங்கள்
புன்னகையொடு நிற்பானேன் பூமுடி சூட்டுங்கள்

இந்தநல் தேசத்தார்களே ஏகமாய்க் கூடுங்கள் சிந்தனையை வைத்துக்கொண்டு பூமுடி சூட்டுங்கள்

சின்ன நாடுகளை விட்டுச் சீக்கிரம் ஏகுங்கள்
பொன்னகராம் சாலேமுக்குப் போய் முடி சூட்டுங்கள்

குற்றமில்லாப் பாலகரே கூடிப் குலாவுங்கள்
வெற்றி வேந்த ரேசுவுக்கே வெண்முடி சூட்டுங்கள்

யேசுவென்ற நாமத்தையே எல்லாரும் பாடுங்கள்
ராசாதிராசன் தலைக்கு நன்முடி சூட்டுங்கள்

சகல கூட்டத்தார்களே சாஷ்டாங்கம் செய்யுங்கள்
மகத்வ ராசரிவரே மாமுடி சூட்டுங்கள்

 

DOWNLOAD PPT

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

 சாது சுந்தர் சிங்

மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது ...
Read More

அப்போஸ்தலன் பவுல் வரலாறு

போதகரும் சிறுவனும் ஒரு மேஜையின் ...
Read More

டேவிட் லிவிஙஸ்டன் வழக்கை வரலாறு

இருண்ட கண்டம் வெளிச்சம் ஆயிற்று ...
Read More

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE