சந்தத மங்களம் மங்களமே
சந்தத மங்களம் மங்களமே
அந்தம் ஆதி இலான் அருள் சேயா
எந்தை யேசு கிறிஸ்து சகாயா
அந்தரம் பரம் பூமி அடங்கலும் விந்தை மேவி நிறைந்த விசாலா
இந்த நாள் மணம் செய்யும் இவர்க் கருள் தந்துன் ஆசிடைய சாற்றும் தயாபரா
வையமுற்ற மணவறைப் பந்தலில் ஐயனே உன் அருட்கொடி வந்திருந்து
உய்ய ஐங் குறியாலும் உவந்தருள் செய்யும் ஏக திரித்துவ தேவா
கர்த்தனே, கருணைக் கடலே உயர் பெத்தலைப் பிரதாப விசேடா
புத்திரர் பெறவும் புகழ் ஓங்கவும் சித்தம் வைத்தே இவர்க் கருள் செய்திடும்