Saruvaesuvara Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song

சருவேசுரா ஏழைப்பாவி என் பேரிலே
தயவாய் இரும் சுவாமி

திரியேக பரதேவா நெறி மேவும் ஒரு யோவா
சித்தம் இரங்கிக் காத்துக் கிறிஸ்தின் முகத்தைப் பார்த்து

தந்தை நின் ஒன்றான மைந்தன் தனைக் கொடுத் தித் தகைமை உலகை நேசித்தாய் நின் சொந்தக் கிருபை தனைச் சிந்தித்துணர மறை தொகுத்தெனக் குபதேசித்தாய் இந்தப் பெரிய நேசம் புந்திக் கொளியதாக்கும் எந்தப் படியும் என் நிர் பந்தம் அனைத்தும் போக்கும்

தேவரீர்க் கேற்காத தீவினைகளைச் செய்தும் தண்டியாமல் பொறுத்தீர் நீர் யாவும் அறிந்திருந்தும் கோபித்துக் கைவிடாதென் நன்றி கேட்டை மறுத்தீர் ஜீவனே உமக்குப் பாவி பதில் என்செய்வேன்
மேவி அடி தொழாமல் ஆவி எங்ஙனம் உய்வேன்

நெஞ்சில் தெய்வ பயம் கொஞ்சமேனும் இல்லாமல் நீதி வழியைக் கடந்தேன் கெட்ட வஞ்ச உலக வாழ்வை மிஞ்சத் தேடிப் பேயின் மனதுக்கேற்க நடந்தேன் பஞ்ச பாவி கூவிக் கெஞ்சும் ஜெபத்தைக் கேளும் தஞ்சம் என்றேன் உனக்கே அஞ்சல் என்றெனை ஆளும்

 

DOWNLOAD PPT

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

ஐடா ஸ்கடர்

நெரிசலிலும், வெப்பத்திலும் சிக்கித் தவிக்கும் ...
Read More

 சாது சுந்தர் சிங்

மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது ...
Read More

அப்போஸ்தலன் பவுல் வரலாறு

போதகரும் சிறுவனும் ஒரு மேஜையின் ...
Read More

டேவிட் லிவிஙஸ்டன் வழக்கை வரலாறு

இருண்ட கண்டம் வெளிச்சம் ஆயிற்று ...
Read More

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE