சிந்துதே சிலுவையில் இரத்தமாய்…
காயங்களால்…
முள்முடி தலையிலே குடையுதே…
வேதனையால்
தள்ளாடிடும் உந்தன் பாதங்களே
தோளில் சுமந்தீரே
பார சிலுவையை.
எனக்காய்.
ஏன் உம் மேல் இத்தனை பாடுகள்.
நான் வாழவே.
சாட்டைகளால் அடிக்க.
பரிகாசம் சூழ.
உம் இதயம் உடைந்தே
துடிக்கின்றதே
ஆணிகளும் பாய
இரத்த வெள்ளம் ஓட
துரோகிகளும் மன்னித்திட
வேண்டி நின்றீரே
கள்ளர் மத்தியில் கபடில்லாமல்.
பாவியின் கோலம் ஏற்றீரே
ஏன் உம் மேல் இத்தனை பாடுகள்
நான் வாழவே.
தாகம் கொண்டீர் எனக்காய்.
காடியினால் ஏமாற்றம்.
இழந்ததை பெற்றுக்கொள்ள
ஏற்றுக்கொண்டீரே.
உறவுகள் ஓட
அந்தகாரம் சூழ
சித்தம் செய்ய உயிர் ஈந்தீர்
அன்பின் ஆழமே
உந்தன் தியாகம் போல்
ஏதும் இல்லையே
சாவின் தியாகம்
ஏற்றீரே
ஏன் உம் மேல் இத்தனை பாடுகள்
நான் வாழவே சிந்துதே
DOWNLOAD PPT
Sinthuthea Siluvaiyil Song Lyrics Chords PPT Sis. Beryl Natasha , Sinthuthea Siluvaiyil Song Song Lyrics ,Sinthuthea Siluvaiyil Song Lyrics Chords PPT