என்னை தாலாட்டும் தகப்பன் நீரே
என்னை தோளின் மேல் சுமப்பவரே
உம் அன்பிற்கு இணை இல்லை
உணர்வுக்கு ஈடு இல்லை
எனக்கென்று எதுவும் இல்லை
உம்மைத் தவிர எனக்கென்று எதுவும் இல்லை
1. எனக்கு அரணாக என் வாழ்வின் பெலனாக
இதுவரை நடத்தினீரே
அமிழ்ந்து போகாமல்
தலை குனியாமல்
கை தூக்கி எடுத்திரையா
நன்றி உமக்கு நன்றி
என் வாழ்நாளெல்லாம் நன்றி
2. சோற்வுற்ற நேரத்தில்
கலங்கின வேளையில்
வாக்குகள் தந்தீரையா
வெறுமையான என்
படகில் ஏறி வந்து நிரப்பி மகிழச் செய்தீர்
3. கடந்த நாளெல்லாம்
கண்மணி போல் என்னை சுமந்து வந்தீரையா
வேடனின் கன்னிக்கு என்னை தப்புவித்து
சிறகால் மூடி கொண்டீர்
DOWNLOAD PPT