திருமா மறையே அருள்பதியே நின்
திருச்சபை வளர நின்தயை புரியே
கருணை வாசகக் கதிர்பலத் தொளிர
கனகார் புவிநின்றே அகல
மருள்ஜன மொளியுற அவனரு ளுணர
யேசுநாமமெங் கணுமொளி வீச
இறையே நினை மெய் விசுவாச
நேச மோடேயுனின் தாசர்கள் பேச
ஞாலம் அந்தமட் டெம்முடனிருக்க
நயவாக் களித்தாய் எமக்குருக்குச்
சீலமதாயுனின் வசனமதுரைக்க
ஆறிரண்டு பேரான வருடனே
அமலா இருந்தாய் வெகுதிடனே
போரற அருளிய நேயமே போலே
நின்னையன்றிக் கட்டிட எமக்காகா
நேயா தூயா நினை வாகா
உன்னி உழைத்திடப் பலமளி யேகா
சத்ய போதகம் இத்தரைதனில் செழிக்க
தமியோர் நின் புகழே உரைக்க
நித்திய பாக்கியமே புவிக் களிக்க