உலகில் பவப் பாரத்தால் சோரும் இளைப்
பூர்ந்த நரரே வந்து சேரும்
அலைசடிப் பட்டவரே வாரும் என்றன்
ஆறுதலால் அவற்றைத் தீரும்
பாவி என்றெண்ணித் திகைப் போரும் என்றன்
பாவம் தீராதென் றிருப் போரும்
ஆவலாய் ஓடி வந்து சேரும் நான்
ஆகாமியர்க்காக வந்த தோரும்
இளமை என்றே எண்ணி நில்லாதே சாவும்
இளமை என்று சொல்லிச் செல்லாதே
வளமாய் வருவதைத் தள்ளாதே கெட்ட
வழக்க மிதையே கைக் கொள்ளாதே
வாலிப ப்ராய மிதில் நாளும் இன்ப
வாழ்வு சுகிக்கவென்று மாளும்
சீலரே இன்றென் னுரை கேளும் அவை
சேர்க்கும் நரகத்தில் எந்நாளும்
காலம் கடந்த கிழவோரே வீணாய்க்
காலம் கழித்தே உழல்வோரே
காலமே தேட மறந்தாரே உங்கள்
கவலையைத் தீர்ப்பேன் அறிவீரே
DOWNLOAD PPT