உம் நாமம் உயர்த்தி பாடுவேன்
உயிருள்ள வரைக்கும் போற்றுவேன்
இயேசுவே
உம் நாமம் பெரியது
உம் நாமம் உயர்ந்தது
உம் நாமம் என்னை மீட்டது
இயேசுவே
இரத்தத்தால் பாவங்களை
கழுவினீர்
நீதியின் சால்வையை
உடுத்தினீர் இயேசுவே
தாழ்மையில் இருந்தென்னை
உயர்த்தினீர்
தள்ளாடி நடந்தேன்
தாங்கினீர் இயேசுவே