உம்மாலே எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
உங்க கிருபையே உங்க கிருபையே
என்னை தாங்கி நடத்தினதே
அலை மோதும் வாழ்வில் அசையாமல்
நிற்க நங்கூரமாக இருப்பவரே
காற்றையும் கடலையும் அதட்டி அமைதி
படுத்தினதும் உங்க கிருபையே
கரடு முரடான பாதைகளில்
வெளிச்சமாய் என்றும் இருப்பவரே
வழிகளில் எல்லாம் தூதர்கள் அனுப்பி
காப்பதும் உங்க கிருபையே