உம்மோடு நான் இருந்தால்
உலகத்தை ஜெய்த்திடுவேன்
உம் சித்தம் நான் செய்தால்
என்றென்றும் வாழ்ந்திடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லே லூயா
மரண இருளில் பள்ளதாக்கில்
நடந்தால் பயம் இல்லை
உமது கோலும் தடியும்
என்னை தேற்றி நடத்திடுமே
சாத்ராக் மேஷாக் ஆபத் நேகோ
நெருப்பில் பாதுகாத்தீர்
சிங்கத்தின் கெபியில் போட்டாலும்
என்னை பாதுகாப்பீர்