உனக்கொருவர் இருக்கிறார்
உன்னை விசாரிக்கத் துடிக்கிறார்
உன்னையும் என்னையும் இயேசு நேசிக்கிறார்
உன்னை உள்ளங்கையில்
வரைந்திருக்கிறார்
சாதி சனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர்
ஜோதிகளின் பிதாவாம் இயேசுவானவர்
சூழ்நிலைகள் மாறினாலும்
இயேசு உன்னை மறப்பதில்லை
சிலுவையில் ஜீவன் விடும்
நேரத்திலும் வெறுக்கவில்லை
ஆகாதவன் என்று உன்னை
யார் தள்ளினாலும் ஆபிரகாமின்
தேவன் உன்னைத் தள்ளிடுவாரோ
தஞ்சம் என்று வருபவரை தள்ளாத நேசரவர்
அஞ்சிடாதே மகனே மகளே
என்றுன்னை தேற்றிடவே
வியாதியஸ்தன் என்று உன்னை
ஒதுக்கி வைப்பார்கள்
வேண்டாத வார்த்தைகளை
சொல்லிப் புண்படுத்துவார்கள்
வாழ்வதா சாவதா என்று
நீ அழுது புலம்பிடுவாய்
வாழத்தான் வேண்டும் என்று
வியாதியிலே சுகம் தரவே
கஷ்டப்படும் போது நமக்கு உதவுவாரில்லை
கடன்பட்ட போது அதைத் தீர்ப்பவரில்லை
இஷ்டப்பட்ட தெய்வங்களெல்லாம்
கும்பிட்டுப் பார்த்தாச்சு
நம்ம கஷ்டங்கள் தீர்க்க
அவை முன் வரவில்லை
உலகத்தில் தெய்வங்கள் உண்டென்று
சொல்வதெல்லாம் சும்மாங்க
இயேசு கிறிஸ்து ஒருவரே
மெய்யான தெய்வமுங்க
ஜனங்களின் பாவம் நீக்கி
இரட்சிக்க வந்த தெய்வமுங்க