உன்னதரின் மறைவில் சர்வ வல்லவரின்
நிழலில்-தங்கிடுவேன் அஞ்சிடேனே
தம் சிறகாலே மூடிடுவார்
தேவன் என் அடைக்கலமே – 2
நான் கர்த்தரை நோக்கிடுவேன்
என் அடைக்கலம் என்று சொல்வேன் – 2
என் நம்பிக்கை நீர் என் கோட்டையும் நீர்
பணிந்தே உம்மை துதித்திடுவேன்
என் பக்கத்தில் ஆயிரம் பேர்
பதினாயிரம் பேர் விழுந்தாலும்
என்னை அணுகிடாதே அவர் தாபரமே
என் தேவனே காத்திடுவார்
என் வழிகளில் காத்திடுவார்
தூதர் வந்தென்னை ஏந்திடுவார்
ஆபத்தில் அவரே என்னோடிருந்து
என் ஜெயக்கொடிதனை ஏற்றிடுவார்