வேத வசன விதைகளைப் புவியில்
விதைப்பில் தெளிப்பில் வெகு பல பாடம்
பாதைதனில் விதைக்கும் பக்தனருள்வேதம்
பக்தர்களைச் சேர்க்கும் சுத்தனருள் பாதம்
அதிசய வசனம் இந்திய கரையில்
ஆழமாய் மரமாய் நடப்பட்டு வருதே
நதிவெள்ளம் பெறுதே நலமிக்கத்தருதே
நாளும்பாவியிடம் பேர் பெற்று வருதே
தீயர்கள் துணையாய் துன்புறும் வேளையில்
தேறுதலளித்துத் துலங்கிடும் வசனம்
நேயமாய் மனதில் இறுகவே நின்று
நிமலன் கிருபை நிறைவுறச்செய்யும்
நால்வகைத் தாளமேளங்கள் கொட்ட
நடனமுடை சபைமிகக்கூடச்
சாலவே மக்கள் இன்னிசை பாடச்
சாமி வந்து சேர சந்தோஷங் கொண்டாட