இயேசு என் வாழ்வின் ஜோதியாய்
இறங்கி வந்தாரே
சிதைந்துப் போன என் வாழ்வையே
ஒன்றாய் சேர்த்தாரே
இயேசுவை நோக்கியே நான்
என்றும் வாழுவேன்
இயேசுவை நோக்கியே நான்
என்றும் மகிழுவேன்
உலக ஆசைகள் இவ்வுல ஆசைகள்
நான் வெறுத்து தள்ளுவேன்
கஷ்டமும் நஷ்டத்திலும்
நான் இயேசுவை நம்புவேன்
கஷ்டமும் நஷ்டத்திலும் நான்
இயேசுவை தேடுவேன்
இறங்கி வருவாரே இறங்கி வருவாரே
ராஜாதி ராஜனாக ராஜாதி ராஜனாக