இயேசு மணவாளனே நேசமணர்க்கீயுமே
ஆசிகள் இந்நேரமிதிலே தாசரின் புகலிடமே
காசினியின் மீதிலே வாசம் செய்யும் காலமே
நேசமுடன் வாழ்ந்திடவே
பாரும் இந்த நேரமே வல்லமையின் நாதனே
மாறாத பரம்பொருளே
ஆருயிர் இவர்க்கு நீரே
தாரும் இந்த நேரமே பட்சமுடன் அப்பனே
ஆறாக அருள் பாயவே
கானா எனும் ஊரிலே கலியாண வீட்டிலே
தானங்களைத் தந்தருளியே
விந்தை விளங்கச் செய்தீரே
வானவனே இந்த மணம் மீதினிலே சேர்ந்துமே
ஞானா உம் அருள் தாருமே
இன்பப் பெருக்கிலும் துன்பம் துக்கத்திலும்
ஒன்றாக வாழ்ந்திடவே இன்றே ஆசீர்வதியுமே
அன்பின் பெருக்கமே என்றும் விளங்கவே
அன்பே அருள் புரிவீரே
சத்தியமும் ஜீவனும் உத்தமத்தின் வழியும்
பக்தியுடனே தொடர்ந்து சத்தியம் நிலை நிறுத்த
சுத்த ஜீவியத்தில் நித்தமுமே நடந்து
துத்தியம் பாடிடவே
பலமாய் படர்ந்திடும் உலகில் சுடர்களாய்
வாழ்நாளில் வாழ்ந்திடவே
நாதா அருள் புரியுமே
சகலமும் உமக்கே சதா காலங்களிலும்
ஜெகமதில் தந்து போற்றவே