ஏசுவைப் போல நட என் மகனே
ஏசுவைப் போல நட இளமையில்
நீசனுமனுடர் செய் தோஷமும் அகற்ற
நேயமுடன் நர தேவனாய் வந்த
பன்னிரு வயதில் அன்னை தந்தையுடன்
பண்டிகைக்கு எருசலேம் நகர் வர
சின்ன வயதிலே தேசிகரைக் கேட்ட
சீர்மிகு ஞானத்தை உள்ளந்தனிலெண்ணி
சொந்தமாம் நாசரேத்தூரினில் வந்தபின்
சுத்தமாய் தந்தைக் குதவியாய் வளர்ந்து
எந்த நாளுங் கோணி எதிர்த்துப் பேசாது
இருந்து மகிழ்ந்தவர் சொற்படி நடந்த
எனையிளைஞரோ டீனவழிசெல்லா
எவருக்கும் சிறந்த மாதிரியாய் நின்று
ஞானம் தேவ கிருபை ஆவி பெலன் கொண்டு
நரரின் தயவிலும் நாளாய் வளர்ந்தவுன்