ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ
வாகு தங்கு குருனாதா நமோ நமோ
ஆயர் வந்தனைசெய் பாதா நமோ நமோ
மாகமண்டல விலாசா நமோ நமோ
மேகபந்தியி னுலாசா நமோ நமோ
வான சங்கம் விஸ்வாசா நமோ நமோ
நாகவிம்பம் உயர் கோலா நமோ நமோ
காகமும் பணிசெய் சீலா நமோ நமோ
நாடும் அன்பர் அனுகூலா நமோ நமோ
ஏசு மந்த்ரமுறு பூமா நமோ நமோ
யூக தந்த்ரவாதி சீமா நமோ நமோ
ஏசு வென்ற திருநாமா நமோ நமோ
அறிவி னுருவாகிய மூலா நமோ நமோ
மறையவர்கள் தேடிய நூலா நமோ நமோ
அதிசய பராப சீலா நமோ நமோ
பொறிவினை யூறத சரீரா நமோ நமோ
குறையணுவிலாத குமாரா நமோ நமோ
புவன முழுதாள் அதிகாரா நமோ நமோ
நிறைவழியின் மேவிய கோனே நமோ நமோ
முறைகள் தவறாத விணேனே நமோ நமோ
நிதிபெருகு மாரச தேனே நமோ நமோ
இறை தவிது பாடிய கீதா நமோ நமோ
பறைகள்பல கூடிய போதா நமோ நமோ
எருசலை யினீடிய நாதா நமோ நமோ
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanaigal lyrics, keerthanaigal songs lyrics, aaga mangal bukal lyrics, aaga mangal bukal songs lyrics