பாஸ்டர் ஒருவர் மருத்துவமனையில் சாக்ஸபோன் வாசித்து நோயாளிகளையும் மற்றும் மருத்துவர்களையும் உற்சாகப்படுத்தும் வீடியோ.

பாஸ்டர் ஃபெராஸ் பாதுகாப்பு உபகரணங்களை சரியாக அணிந்து சாவோ பாலோவின் வடக்கு மண்டலத்தில் உள்ள சாவோ காமிலோ மருத்துவமனையில் நோயாளிகளுக்கும் சுகாதார நிபுணர்களுக்கும் ஒரு சிறிய ஆறுதலையும் நம்பிக்கையையும் கொண்டு வரும் விதமாக சாக்ஸபோன் வாசித்தார்.

இந்த செயல் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, நோயாளிகள் ஒன்றாக பாடலைக் கேட்கவும் பாடவும் தங்கள் படுக்கையறை கதவுகளைத் திறந்ததார்கள் அங்கு இருந்த டாக்டர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

பாஸ்டர் “அவர் வாழ்கிறார்” என்ற தலைப்பின் உள்ள ஒரு பாடலை பாடி ஆறுதலையும் நம்பிக்கையையும் அளித்தார்,இந்த பாடல், யோவானின் நற்செய்தியின் 14 ஆம் அத்தியாயத்தையும் 19 வது வசனத்தையும் அடிப்படையாகக் கொண்டது: “இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள். ”.

-ஆமென்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE