கிணற்றை விற்றவன் தண்ணீரைத் தரவில்லை ஏன்?

ஒரு பணக்காரன் தனது கிணற்றை ஒரு உழவனுக்கு விலைக்கு விற்றான். கிணற்றை விலைக்கு வாங்கிய உழவன், மறு நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தான்.

அங்குக் கிணற்றை விற்ற பணக்காரன் நின்று கொண்டிருந்தான். அவன் உழவனைத் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான்.

உழவனுக்குக் கோபம் வந்தது. “எனக்குக் கிணற்றை விற்று விட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் செய்கிறாயே? இது நியாயமா?” என்று கிணறு விற்றவனைப் பார்த்துக் கோபத்துடன் கேட்டான்.

கிணறு விற்ற பணக்காரன், “நான் உனக்குக் கிணற்றை மட்டும்தான் விற்றேன். அதிலிருக்கும் தண்ணீரை இல்லை. எனவே நீ தண்ணீரை இங்கிருந்து எடுக்கக் கூடாது” என்று வாதம் செய்யத் தொடங்கினான்.

உழவன் குழப்பத்துடனும் கோபத்துடனும் உள்ளூர் நீதியரசரிடம் சென்று முறையிட்டான்.

நீதியரசர் இருவரையும் அழைத்து இருவர் பக்கத்து நியாயத்தையும் விசாரித்தார்.

பின்னர் கிணற்றை விற்ற பணக்காரனிடம் “நீ கிணற்றை இந்த உழவனுக்கு விற்றுவிட்டதால் கிணறு உன்னுடைய தல்ல. அப்பொழுது அந்த பணக்காரன் குறுக்கிட்டு உண்மைதான் ஆனால் தண்ணீரை நான் அவனுக்கு விற்கவில்லை என்று முறையிட்டான், மிகவும் நல்லவரான அந்த நீதியரசர் அந்த பணக்காரனைப் பார்த்து நீ உழவனிடம் விற்ற கிணற்றில் உனது தண்ணீரை இன்னமும் வைத்திருப்பது தவறு. உனக்கு அதில்தான் தண்ணீரைச் சேமித்து வைக்க வேண்டுமென்று விரும்பினால், நீ உழவனுக்கு அதற்கான வாடகையைத் தினமும் கொடுத்து விடவேண்டும் . இல்லையென்றால் கிணற்றிலிருந்து உனது தண்ணீரை எடுத்துக் கொண்டு உடனே வெளியேற வேண்டும்” என்று அந்த நீதியரசர் தீர்ப்புக் கூறினார்.

கிணறு விற்ற பணக்காரன், தனது தவறுக்கு மன்னிப்புக் கேட்டு கிணற்றின் முழுப் பயனையும் உழவன் அனுபவிக்கலாம் என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டான்.

Moral stories in Tamil, Sunday class stories, Tamil Stories for Kids

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE