திருமணம் செய்ய ஆயத்தமாக இருக்கிறீர்களா? தயவு செய்து இதை படியுங்கள்.

தன் சொந்த சகோதரன் ஏசாவின் சேஷ்ட புத்திர பாகத்தை ஏமாத்தி பறிச்சிகிட்டு தன் தாய் மாமா லாபான் கிட்ட போய் சேரும் யாக்கோபுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. மாமாவுக்கு ரெண்டு பெண் பிள்ளைங்க! மூத்த பெண் பேரு லேயாள் அடுத்த பெண் பேரு ராகேல். லேயாள் கொஞ்சம் கூச்ச பார்வை இருக்கிற பெண், ராகேல் லட்சணமா, பாக்க ரொம்ப அழகான உருவத்தோடு இருந்தாள். யாக்கோபுக்கு ரெண்டாவது பொண்ண ரொம்ப பிடிச்சு போக, உடன்னே propose எல்லாம் பண்ணிடல நேரா தன் மாமா கிட்ட கேக்குறாரு..அதுக்கு மாமாவும், ” அட வேற யாரோ ஒருத்தருக்கு என் பொண்ண குடுக்கறதுக்கு உனக்கே குடுக்கலாம் தான், ஆனா நீ வீட்டை விட்டு ஓடி வந்துட்ட, எந்த சொத்து சுகம் எதுவும் இல்ல.. உன்ன நம்பி எப்படி நான் என் பொண்ண குடுப்பேன்?? நீ ஒன்னு செய்..ரொம்ப எல்லாம் வேணா..ஒரு ஏழு வருஷம் என் பொண்ணுக்காக என் வீட்ல வேல செய், அதோ அந்த ஆடுகளை மேய்ச்சி பாத்துக்கோ..உனக்கு நான் சம்பளம் குடுக்குறேன்..ஏழு வருஷம் போகட்டும்..அப்புறம் கண்டிப்பா என் பொண்ண உனக்கே கல்யாணம் பண்ணி குடுக்கிறேன்..

இதுக்கு ஒத்துகிட்ட நம்ம ஹீரோ யாக்கோபு ஏழு வருஷம் கடுமையா உழைக்கிறார்..ஒரு பாட்டுல நாம கேட்ட மாதிரி ‘ வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும் ‘ காலங்கள் கடகட ன்னு கடந்து போச்சி..ஏழு வருஷம் ஒரே வீட்ல இருக்காங்க, ஒரு தப்பு தண்டா நடக்கல அப்படி நடந்து மாமா கிட்ட மாட்டிகிட்டு முழிக்கல..சும்மா அப்படி ஒரு love! ஏழு வருஷம் முடிஞ்ச உடனே யாக்கோபு ‘ இந்தா மாமா நீ சொன்ன மாதிரி பண்ணிட்டேன்..இப்போ உன் பொண்ண குடு ‘ அப்படினு கேக்குறாரு..’ மாப்ள கண்டிப்பா!! ஆனா அப்படியே அவ்ளோ ஈசியா அப்படினு டக்குனு குடுதுட்டா எப்புடி? ஒரு விருந்து பண்ணி, ஆடு மாடு எல்லாம் வெட்டி சும்மா கலக்கிபுடலாம் இரு..சாயங்காலம் உனக்கு marriage ‘ அப்படின்னு சொல்றாரு..சரி ஏழு வருஷம் wait பண்ணோம்..சாயங்காலம் வரைக்கும் wait பண்ணனும்..அவ்ளோ தான ‘ என்று ஒத்து கொள்கிறார்.. விருந்து, ஆட்டம் பாட்டம் எல்லாம் தடபுடலாக நடக்க சாயங்காலம் யாக்கோபு வீட்டிலுள்ள போறாரு..பொண்ணு கிட்ட பால் பழம் எல்லாம் குடுத்து உள்ள அனுப்பி விடராங்க. காலைல கொக்குரகோ னு சேவல் கூவ மாப்பிள்ளை எழுந்து coffee கொண்டு வந்து எழுப்பின பொண்ண பாத்து ஷாக் ஆய்ட்ராரு!!! பொண்ணு ராகேல் இல்ல லேயாள்!! கத்தி கதறி வெளியே ஒடுறாரு..எதிர் portion ல இருக்கிற மாமாவ கூப்பிட்டு..’ யோவ் மாமா, என்ன காரியம் செஞ்சிட்ட..பொண்ணயே மாத்தி குடுதுட்டு என்ன இப்படி ஏமாத்திட்டியே நீ நல்லா இருப்பியா?? அடியே , நீங்க யாராவது வாய திறந்து உண்மைய சொல்லி இருக்கலாமே ‘ ன்னு புலம்புறாரு.. மாமா, ‘ மாப்பிள்ளை , என்ன மன்னிச்சிடு..கண்டிப்பா நான் உனக்கு நீ உசுரா நேசிச்ச பொண்ண தரேன்..ஆனா இந்த பெரிய பொண்ண யாரு கல்யாணம் பண்ணிப்பா?? நீயே சொல்லு. நீ ரொம்ப நல்லவன் யா என் ரெண்டு பொண்ணுங்களையும் கண்ணு கலங்காம பாத்துப்ப, எனக்கு நம்பிக்கை இருக்கு …இப்பவும் ஒண்ணும் கெட்டு போகல..இந்த ராகேல் கூட்டிட்டு போ, குடும்பம் நடத்து, ஆனா ஒரு condition.. நீ செஞ்ச ஏழு வருஷம் வேலைக்கு ஒரு பொண்ணு கணக்கு ன்னா கூட ரெண்டாவது பொண்ணுக்காக இன்னொரு வருஷம் நீ எனக்காக வேலை செஞ்சி தான் ஆகனும்..அத்தான் முறை ‘!! நம்ம ஹீரோ என்ன பண்ணுவாரு? Condition க்கு ஒத்துகிட்டு அவர் ரொம்ப நேசிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு அடுத்த ஏழு வருஷம் அவளுக்காக தன் மாமா கிட்ட வேலை பாக்குறாரு!

அந்த நாட்கள்ல யூத கலாச்சார முறைப்படி ஒரு ஆண் தான் கல்யாணம் செய்து கொள்ளபோகும் பெண்ணுக்காக bridal price ( பரிசம் அல்லது வெகுமதி ) என்று ஒன்றை கொடுத்து தான் ஆக வேண்டும். பழைய ஏற்பாட்டில் இருக்கும் ஆதியாகமம் 24:53, 34:12 இல் இந்த வழக்கத்தை காணலாம். அதே போல யாத்திராகமம் 22:16,17 இல் கூட இதை ஒரு கட்டளையாகவே இஸ்ரவேல் மக்களுக்கு தேவன் ஏற்படுத்துகிறார். அதே போல சவுல் ராஜா தாவீதை தந்திரமாக கொல்லும்படி தன் மகளுக்காக பரிசமாக 100 பெலிஸ்தியர்களின் நுனி தோல்களை கேட்கிறார் ( 1 சாமுவேல் 18:25).

இந்நாட்களில் இஸ்ரவேல் மக்கள் இதை நடைமுறையில் கடைப்பிடிக்கிறார்களா என்று தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம் அந்நாட்களில் ஒரு ஆண் தான் பெண்ணுக்காக பரிசம் கொடுக்க வேண்டுமே தவிர பெண் குடும்பம் ஆணுக்காக கொடுக்கவில்லை! இது அப்படியே மாறி போய் இந்நாட்களில் ஒரு ஆண் குடும்பம் பெண் குடும்பத்தாரிடம் இவ்வளவு வேண்டும், இது வேண்டும் அது வேண்டும் என்று வரதட்சணை கேட்டு பிரச்சினை பெரிதாகி விட்டது. இப்போது அதுவே ஒரு கௌரவமாக மாறி பெண் வீட்டாருக்கு பெரிய தொல்லையாக உருவெடுத்து நிற்கிறது. இன்றைக்கு அநேக பெண்கள் திருமண வயது வந்தும் கல்யாணம் ஆகாமல் இருக்க இது ஒரு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. புதிய ஏற்பாட்டில் தேவன் இதை விரும்பவில்லை. அன்றைக்கு இருந்த சூழலில் பெண் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்க வேதம் அப்படி ஒரு கட்டளை பிறப்பித்தது. ஆனால் இன்றைக்கு இப்படி வரதட்சணை வாங்குவது வேததின்படி மற்றும் சட்டப்படியும் கூட குற்றமே! ஒருவன் வாழவும் தன் சொந்த குடும்பத்தை நடத்தவும் வேலை செய்ய வேண்டும் என்றே வேதம் அறிவுறுத்துகிறது.
ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.

2 தெசலோனிக்கேயர் 3:10
இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.
2 தெசலோனிக்கேயர் 3:12
ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.
1 தீமோத்தேயு 5:8

இதின் மூலமாக நாம் அறிந்துகொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் ஒருவனுக்கு மனைவியை அருளுகிறார் என்றால் அதுவே பெரிய நன்மை என்கிறது வேதம். இதற்கு மேல் நாம் எதை அவர்களிடத்தில் எதிர்பார்த்தாலும் அது தவறு. மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.
நீதிமொழிகள் 18:22

இனிமேல் திருமணம் செய்ய ஆயத்தமாக இருப்பவர்கள் இதை குறித்து சிந்தித்து வரதட்சணை தவிர்ப்பது மிகவும் நல்லது , வாழ்க்கை நன்றாக இருக்கும், பெண் பிள்ளைகளின் குடும்பங்களும் உங்களை போன்றவர்களை வாழ்த்தும்! தேவன் தாமே உங்களை ஆசீர்வதப்பாராக!

Author: Bro.GODSON GD

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

ஆபிரிக்கா நாட்டிற்கு அழைப்பு

லிவிங்ஸ்டன் அவருடைய இருபதாவது வயதில் ...
Read More

ஆரம்ப வாழ்க்கை

1813ம் ஆண்டு மார்ச் மாதம் ...
Read More

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE