இப்படியாக பணம் போடாமலே சேமிப்புக்கணக்கு உருவாக்கி பயன்பெறலாம்!

இன்றைய நாட்களில் சம்பாதிக்கும் பணத்தில் பலர் வங்கிகளில் சேர்த்து வைக்கின்றனர். சேமிப்பு என்பது மிகவும் நல்ல பழக்கவழக்கமாகும். ஆனால் நாம் பணத்தை கட்டினால் தான் வங்கியில் சேமிப்பு கணக்கு உண்டாகும். எனக்கு தெரிந்த ஒரு நபர் உண்டு. அவர் வங்கியில் பணம்போடாமலே எனக்கு சேமிப்பு பணம் உண்டென்று சொல்லுகிறார். ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?

அவர் ஒரு சாமானிய மனுஷனாக இருந்தாலும், தான் சம்பாதிக்கும் பணத்தில் பலருக்கு உதவிகள் செய்து, ஆலயப்பணிகளுக்கு பொருளாதாரத்தினால் உதவிகள் செய்து, பல போதகர்களை தாங்கி வரும் அவருக்கோ ஒரு குடும்பம் உண்டு. பிள்ளைகள் உண்டு. ஆனாலும் அவர்களுக்காக வங்கியில் பணம்போட்டு சேமித்துவைக்காமல், உதவிகள் எதிர்பார்த்து நிற்பவர்களுக்கு பல உதவிகள் செய்யும் இவர் சொல்லுகிறது என்னவென்றால், ” நான் பிறருக்கு உதவி செய்யும்போது, ஆலயத்துக்கு கொடுக்கும்போது, ஊழியர்களை தாங்கும்போது அந்த பணங்களை பரலோகத்தில் டெபாசிட் செய்துவைக்கின்றேன். எனக்கு எப்போது பணம் தேவைப்படுகிறதோ அப்போது வங்கியில் கையெழுத்திட்டு பணத்தை எடுத்துக்கொள்ளுவதுபோல, கையெழுத்திட்டு பரலோகத்திலிருந்து பெற்றுக்கொள்ளுகிறேன்” என்று.

ஆம், “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம், மேலும், பரலோகத்திலேயே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்” என்று மலைப்பிரசங்கத்தில் பார்க்கின்றோம். அதே நேரம் இயேசு பிரசங்கிக்கும்போது சொல்கின்றார், “கேளுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்” என்று. விசுவாசத்தோடு இப்பூமியிலே வாழ்பவர்களுக்கு கொடுங்கள், அதற்குரியபலனை பரலோகத்திலிருந்து நாம் பெற்றுக்கொள்ளுவோம். இவ்வுலத்தின் வங்கிகளில் இது செல்லாதது தான், ஆனால் நமக்கோ ஒரு பெரிய வங்கி உள்ளது. அது தான் பரலோகம். கஷ்டப்படும், தேவையோடு இருக்கும் நபர்களுக்கு கொடுக்கும் மனப்பான்மை உங்களுக்குள் வரும்பொழுது, அதை செய்துமுடிக்கும்பொழுது கண்டிப்பாக ஆண்டவரின் வேதனையில்லா ஆசீர்வாதம் நாம் எதிர்பாரா விதத்தில் நமக்கு உண்டாகும்!

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE