பிரியாணியில் இதை சேர்த்துப்பாருங்க வாசம் அதிகமா இருக்கும்!

பிரியாணி….! பிரியாணியின் மணம்….! கேட்கும் போதே சாப்பிடணும்போல தோன்றுகிறது தானே. தென்னிந்திய மக்களான நமக்கு மிகவும் விருப்பமான உணவு பிரியாணி தான். அதிலும் நம் மக்கள் வித்தியாசம் வித்தியாசமான முறைகளில் பிரியாணி செய்து சாப்பிட விரும்புவர். உங்களெல்லாருக்கும் தெரியும் அந்த பிரியாணி-க்கென்று சில தேவையானபொருள்கள் உண்டு. முக்கியமாக பிரியாணியின் வாசத்திற்காகவே பலப்பொருள்களை சேர்ப்பதுண்டு. பட்டை, அதிமதுரப்பூ, கிராம்பு, ஏலக்காய் என இவற்றை நெய்யில் இட்டு தாளித்து அதின் வாசனை தூக்கலுக்காக போடுவது வழக்கம். உங்கள் வீட்டில் வாசத்தோடு சமைக்கும்பொழுது பலநேரங்களில் அந்த தெரு முழுவதும் தெரியவரும் இன்று உங்கள் வீட்டில் பிரியாணி என்று.

அப்படி பலப்பொருட்கள் சேர்த்து வாசம் வரவைப்பது மிகவும் அவசியமா என்று கேட்டால், பலர் வாசத்திற்காகவே பிரியாணியை விரும்பி சாப்பிடுவர். நீங்களும் ஒருவேளை அப்படியாகக்கூட இருக்கலாம்.

நீங்கள் சமைக்கும் பிரியாணி மட்டுமில்லை, நீங்களும் கண்டிப்பாக நறுமணம் வீசுகிறவர்களாய் இருக்கவேண்டும் நீங்கள் வசிக்கும் பகுதிகளில். தினமும் நான்கு வேளை குளித்து நறுமணப் பொருட்களை தெளித்துக் கொள்வதன் மூலமாக அல்ல. வேதத்தில் பார்க்கிறோம் ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம். இப்படிப்பட்டவைகளுக்கு ஈடானது எதுவுமில்லை என்று. பிரியாணியில் நறுமணப் பொருட்களை சேர்ப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல், இந்த குணாதிசயங்களை உங்கள் வாழ்வில் சேர்ப்பது அதிக முக்கியம். மேலும் அதை நடைமுறைப்படுத்தினால் கண்டிப்பாக உங்களது நறுமணம் உங்கள் வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் வெளிப்படும். அதன்மூலம் நீங்களும் உங்கள் குடும்பமும் நீங்கள் வசிக்கும் பகுதியும் ஆசிர்வதிக்கப்படும்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE