உடைஞ்சதுனால ஏற்பட்ட ஆசீர்வாதம்!

ஒரு தோட்டக்காரரர் இரண்டு மண்குடங்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு போனார். தினமும் வீட்டிற்கு அப்பால் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் நிரப்பிக்கொண்டு வீட்டிற்கு வருவது தோட்டக்காரரின் வேலை. சிலமாதங்கள் கடந்தபின், அதில் ஒரு மண்குடத்தில் சிறிய வெடிப்பு ஏற்பட்டது. அதனால் தோட்டக்காரர் எவ்வளவு தண்ணீர் நிரப்பினாலும், வீட்டிற்கு வந்துசேரும்போது அதில் பாதி குடம் தான் தண்ணீர் இருக்கும். ஆனால் அவருடைய இன்னொரு குடத்தில் முழு தண்ணீரும் இருக்கும். அதைக்கண்ட இந்த வெடிப்புள்ள குடம் மிகவும் மனம் வருந்தியது. தன் எஜமான் எவ்வளவு கஷ்டப்பட்டு நிரப்பிவருகிறார்கள் ஆனால் வீட்டிற்கு வரும்போது பாதி தான் என்னால் கொடுக்கமுடிகின்றது என்று.

அந்த மண்குடம் வருந்துகிறதை கண்ட அந்த தோட்டக்காரர் குடத்திடம் காட்டினாராம், உன் குடத்திலிருந்து நடந்து வருகின்ற வழிமுழுவதும் தண்ணீர் சிந்துவதால் பார், எவ்வளவு அழகான செடிகள் பூக்கள் வளர்ந்து அழகை சேர்த்துள்ளன என்றும், இவையனைத்தும் நம் வீட்டிற்கு வரும் பாதையை அலங்கரித்துள்ளது என்றும் சொன்னாராம். அதை பார்த்த, அதை கேட்ட மண்குடத்திற்கு சந்தோஷமும் திருப்தியாகவும் இருந்தது.

நம் வாழ்க்கையில் நாம் படித்த படிப்பு, நாம் கற்றுக்கொண்ட காரியங்கள் சில நேரம் வீணாவதுபோல காணப்படும். அப்போது நம்மை அறியாத ஒரு சோகம் ஏற்படும் வாழ்க்கையில். அதேபோல சில நேரங்களில் ஜெபிக்கும்போது வேதம்வசிக்கும்போது, அதினால் எந்த நன்மையும் நடக்கவில்லை, மற்றவர்களுக்கு நடக்கிறது ஆனால் எனக்கு மட்டும் எல்லா பிரயாசமும் வீணாகப்போகிறது என்று நினைக்கலாம். ஆனால் நீங்கள் ஜெபிக்கும்போது வேதம்வாசிக்கும்போது விடுகின்ற ஒவ்வொருசொட்டு கண்ணீரையும் தேவன் துருத்தியில் சேர்த்து வைக்கிறார் என்று வேதத்தில் வாசிக்கிறோம். ஒருநாள் வேண்டுதல் நிறைவேறும்பொழுது பார்ப்பீர்கள் சிந்தின ஒவ்வொரு கண்ணீரும், பிரயாசமும் எவ்வளவு அழகாய் ஆசிர்வாதமாய் உருவாகியிருக்கிறது என்று.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE