அப்பா-ன்னா இப்படி இருக்கணும்ங்க!

சுசி ஒரு வாலிப பெண். ஒரு சமையல் போட்டியில் பங்கேற்கின்றாள். போட்டி ஆரம்பமானது, எல்லாரும் சமைக்க ஆரம்பித்தார்கள். விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த போட்டியில் சுசி யும் விறுவிறுப்பாக சமைக்கின்றாள். அப்போது அவளுக்கு நெய் தேவைப்பட ஒரு புது நெய் பாட்டிலை திறக்க முயற்சிக்கிறாள். அனால் அவளால் அந்த அவசரத்தில் திறக்க இயலவில்லை. அங்கே போட்டிக்குரிய நேரம் ஓடிக் கொண்டிருக்க பலவிதங்களில் திறக்கப்பார்கிறாள், அவளின் முழு பெலனையும் உபயோகித்தும் அவளால் திறக்கமுடியவில்லை. நேரத்தை பார்க்கிறாள், இருதயத்திற்குள் பயம் பெரிதாக வர, இனி என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்த வேலையில், அங்கே சுற்றி வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குள் நடுவே நின்ற தன் தந்தையை நோக்கி ஓடினாள். போட்டியின் விதிமுறைமையின்படி பார்வையாளர்களிடம் போகலாமா போகக்கூடாதா என்று கூட யோசிக்கவில்லை அவள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தன் தந்தையால் மட்டுமே திறந்து கொடுக்க முடியும் என்று எண்ணி அவரிடம் கேட்கிறாள். உடனே அதை வாங்கிய தந்தை இறுகிப்போயிருந்த அந்த பாட்டிலை திறந்து கொடுக்கிறார். அதை வாங்கிக்கொண்டு போய் போட்டியில் தன் வேலையை தொடர்கிறாள் சுசி.

இது சுசி மட்டுமில்லை நாம் அனைவரும் செய்யும் ஒன்று தகப்பனிடம் போவது. நம்மில் பலருக்கு நம் தகப்பன் மட்டும் தான் ஹீரோ. ஏனென்றால் பலமுறை நம்மை பிரச்னையிலிருந்து காப்பாற்றுவது அவர் மட்டும் தான். நம்மால் இயலாது என்ற சூழ்நிலையில் நமக்கு உதவி செய்வது நம் தகப்பன் மட்டும் தான். சிறிய பெரிய என பிரச்சனை எப்பேற்பட்டதாய் இருந்தாலும் எதையும் பொருட்படுத்தாமல் தகனிடம் ஓடுவது தான் பிள்ளையான நமது இயல்பான குணம்.

வேதத்தில் ஒரு வசனம் சொல்கிறது “சங்கீதம் 103:13 இல் தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல,கர்த்தர் தமக்கு பயந்தவர்களுக்கு இரங்குகிறார்” என்று. சுசியால் முடியாது என்ற சூழ்நிலை வந்தபோது தன் முழுபெலத்தையும் கொடுத்து அவளுக்கு உதவி செய்ததுபோல், கர்த்தரும் அவருக்கு பயந்த அவருடைய பிள்ளைகளுக்கு இரங்குவார் என்பது உண்மை. பிரச்சனை என்று ஒன்று வரும்போது மனிதர்களை தேடிப்போகாமல் நம் தகப்பனாகிய இயேசுவை நோக்கி போகும்போது அவர் கண்டிப்பாக நமக்கு உதவி செய்வார். சிலநேரங்களில் உதவி கேட்டும் ஆண்டவர் உதவி செய்யாததுபோல தோன்றலாம் அனால் ஒரு உலகப்பிரகாரமான தகப்பனே உங்களுக்காக எதையும் செய்வாரானால் நம் பரமபிதா நமக்கு செய்வது எவ்வளவு நிச்சயம்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE