மே 01 மிஷனரி டேவிட் லிவிங்ஸ்டன் நினைவு தினம்

ஆப்பிரிக்கா. ஆம் , நீங்கள் நினைப்பது போல் ஒரு காலத்தில் அது இருண்டகண்டம். ஆனால் இப்போது, டேவிட் லிவிங்ஸ்டன் அங்கே நுழைந்து விட்டார். இருண்ட கண்டத்தை வெளிச்சமாக்கிவிட்டார்.

ஆப்பிரிக்காவில் பணியாற்றிய மிகச்சிறந்த முன்னோடி மிஷனெரி இவர். 33 வருடங்கள் அயராது உழைத்தார். அடிமை வாணிபத்தில் பெயர் பெற்று விளங்கியது ஆப்பிரிக்கா. அதை அடியோடு ஒழித்தார் லிவிங்ஸ்டன். அட்டூழியங்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்தினார். ஆப்பிரிக்காவை வாழ்வித்தார். உயிர் கொடுத்தார். டேவிட் லிவிங்ஸ்டன் ஒரு டாக்டர் மக்களின் உபகாரி, ஆராய்ச்சியாளர், அனைத்திற்கும் மேலாக கிறிஸ்துவைப் போன்று வாழ்ந்து காட்டியவர்.

29,000 மைல்கள் நடந்து திரிந்தே பல பேருண்மைகளை உலகுக்கு வெளிப்படுத்தினார். ஆப்பிரிக்காவின் பல பகுதிகள் இவரால் கண்டுபிடிக்கப்பட்டவையே. ஆப்பிரிக்காவின் மூலை முடுக்கெல்லாம் சென்று விலங்கினங்களையும், தாவர இனங்களையும் ஆராய்ச்சி செய்தவர். எளிமையும், உறுதியும் வாய்ந்த இவர், எடுத்த காரியத்தில் வெற்றி பெற்றவர். ஆபத்துக்களும், தடைகளும் இவரின் வேகப்பயணத்தைத் தடுத்து நிறுத்த முடியாமல் தவித்தன.
என்ன செய்வதென்முழித்தன. ஆப்பிரிக்காவின் பழங்குடியினர் டேவிட் லிவிங்ஸ்டனை நடமாடும் இயேசுவாகவே கண்டனர். வெள்ளையர், கருப்பர் என்று வித்தியாசம் இல்லாமல் அனைவருடனும் பாசத்துடன் பழகியவர். சமத்துவத்தைப் புகுத்தியவர். உலகில் எந்தப் பகுதியிலும் இல்லாத அளவு ஆப்பிரிக்காவில்தான் தற்பொழுது மிஷனெரி ஸ்தலங்கள் உருவாகி வருகின்றன.
இதற்கு முன்னோடி, டேவிட் லிவிங்ஸ்டன் என்ற அர்ப்பணிப்புள்ள அருட்பணியாளரே ! அவர் இதே தினத்தில் இறைவனில் இணைந்தார்.

நாஞ்சில் ஜெனிக்ஸ்
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

ஐடா ஸ்கடர்

நெரிசலிலும், வெப்பத்திலும் சிக்கித் தவிக்கும் ...
Read More

 சாது சுந்தர் சிங்

மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது ...
Read More

அப்போஸ்தலன் பவுல் வரலாறு

போதகரும் சிறுவனும் ஒரு மேஜையின் ...
Read More

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE