வாழ்க்கை திருப்தியாகவே இல்லையா?

இன்றைய நவீன உலகில் நாம் எதை எதையெல்லாம் பெரிதாய் உயர்வாய் நினைக்கின்றோமோ, அவை யாவும் அற்பமானவை ஒன்றுக்கும் உதவாதவை என்பதை உணர்ந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். நாம் ஒரு சில நேரம் போதுமென்ற மனதுடன் இருப்போம், ஆனால் அடுத்தவர்களையும், உறவினர்களையும் பார்த்தவுடன் அவர்களைப் போல நாமும் இருக்க வேண்டும், அதைப்போல நாமும் வாங்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழும். இந்த எண்ணம் போதும் என்ற மனப்பக்குவத்தை உணர்ந்து கொள்ள விடாது, காலப்போக்கில் பொருள் ஆசைக்கும், பேராசைக்கும் அடிமையாக்கி வாழ்க்கையை இடியாப்ப சிக்கலாக்கிக் கொள்கிறோம்.

பரிசுத்த வேதாகமத்தில் சங்கீதம் 49-ல் இப்படியாக சொல்லப்பட்டிருக்கிறது, ஒருவன் ஐசுவரியவானாகி, அவன் வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே, அவன் மரிக்கும்போது ஒன்றும் கொண்டு போவதில்லை அவன் மகிமை அவனைப் பின்பற்றி செல்லுவதும் இல்லை, அவன் உயிரோடு இருக்கையில் தன் ஆத்துமாவை வாழ்த்தினாலும் நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனுஷர் அவனை புகழ்ந்தாலும், அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன் பிதாக்களின் சந்ததியைச் சேர்வான். கனம் பொருந்தினவனாயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாக இருக்கிறான்.

யோபு என்ற கடவுளுக்கு பயந்த மனுஷன் இருந்தான் அந்த ஊரிலே அவனைப் போன்ற செல்வந்தன் யாரும் இல்லை. இன்றைய உலகில் இருக்கும் மிகப்பெரிய பணக்காரர்காளக இருக்கும் மனிதர்களை போல அக்காலத்தில் அவன் இருந்தான், ஒருநாள் தன் பிள்ளைகளுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அவன் வேலைக்காரர்கலில் ஒருவன் உங்களுடைய 500 கழுதைகளையும் வெட்டி போட்டார்கள் என்ற செய்தியைச் சொல்லிக் கொண்டிருக்கையில் வேறு ஒரு வேலைக்காரன் வந்து உங்கள் 7000 ஆடுகளையும் கொன்று போட்டார்கள் என்று சொன்னான், அவ்வேளையில் வேறு ஒரு வேலைக்காரன் வந்து உங்களுடைய 3000 ஒட்டகங்களும் வெட்டி போடப்பட்டது என்று சொல்லிக் கொண்டிருக்கையில் வேறொருவன் வந்து உங்கள் மகன் மற்றும் மகள்கள் இறந்து போயினர் என்று அறிவித்தான். சோதனை மேல் சோதனை!! இதுபோன்ற சூழ்நிலை நமக்கு வந்து இருந்தால் என்ன செய்திருப்போம்?? ஒவ்வொருவரும் நமக்கு நாமே இந்த கேள்வியை கேட்டுக் கொள்வோம், ஆனால் அவன் என்ன செய்தான் தெரியுமா? “நிர்வாணமாய் என் தாயின் கர்ப்பத்தில் இருந்து வந்தேன் நிர்வாணத்திற்கு திரும்புவேன், கடவுள் கொடுத்தார் கடவுள் எடுத்தார் கடவுளுக்கு நன்றி” என்று கூறினான். நம்மால் சொல்லமுடியுமா அப்படி?

பணம் வேண்டும், வீடு வேண்டும், திருமணம் ஆக வேண்டும, குழந்தை பாக்கியம் வேண்டும், இதற்கு எல்லாம் கடவுலே நீங்கள் தான் எனக்கு, உங்களை மட்டுமே நம்பி உள்ளேன் எனக்கு உதவுங்கள் என்று வேண்டுகிறோம். இவை எல்லாம் கடவுளிடம் இருந்து தான் பெற்றுக் கொண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இவைகள் நம்மை விட்டு எடுத்துக் கொள்ளப்படும் போது கொடுத்த கடவுளிடம் நாம் எப்படி உரையாடுகிறோம் ? கடவுளே வேண்டாம் என்று ஓடி விடுகிறோமா ? இல்லை ஏன் இப்படிச் செய்தீர் ? என்று கேள்வி கேட்கிறோமா, நம்மை நாமே கேட்டுக் கொண்டு விடை அளிக்க முயற்சி செய்து சிந்திப்போம்.

யோபு தன் மனைவியிடம் நன்மையை மாத்திரம் கடவுளிடமிருந்து பெற்றோமே தீமையை பெற வேண்டாமா என்று கடவுளை தூஷிக்கமல் இருந்தான், கடவுள் அவன் முகத்தையும் விசுவாசத்தையும் பார்த்து அவன் எவை எவைகளை எல்லாம் இழந்தானோ அவைகளுக்கு எல்லாம் வட்டியும் முதலுமாக சேர்த்து இரண்டு மடங்கு கொடுத்தார், வேதாகமத்தில் இயேசுவுக்கு அடுத்து அதிக பாடுகளை அனுபவித்த மனிதன் யோபு என்று பார்க்கிறோம் அவன் கடவுளுக்கு பயந்து உண்மையாக இருந்தான் அவனுடைய முடிவு பூரணமாக இருந்தது. பணத்திற்காகவும் ஆசீர்வாதமாகவும் கடவுளை தேடுவது உண்மையான தெய்வ பக்தி என்று சொல்லமுடியாது.

எல்லாம் முற்றும் அறிந்த ஞானி சாலமோன் ராஜா தேவபயம் இல்லாமல் வாழ்ந்தான், அவன் முடிவு கொடுமையின் உச்சத்தில் இருந்தது. அந்த சூழ்நிலையில் அவன் இப்படிச் சொல்கிறான் “மாயை மாயை எல்லாம் மாயை….தேவனுக்குப் பயந்து அவர் கற்பனைகளைக் கைக்கொள் எல்லா மனுஷர் மேல் விழுந்த கடமை இதுவே என்றும் கூறுகிறான். கடவுள் தன்னை உண்மையாய் பயபக்தியோடும், அவருடைய அறிவுரைகளையும், கற்பனைகளையும் கைக்கொண்டு நடக்கிறவர்களுக்கு சகலத்தையும் நன்மையாய் மாற்றி தருகிறார்.

எப்பப்பா மாற்றித் தருவார்? நானும் ரொம்ப நாளா வேண்டுகிறேன் ஒன்றும் நடக்க மாட்டேங்குது என்று சொல்கிறீர்களா?, தேவனிடம் எதைக் கேட்டாலும் நீங்கள் எந்த காரியங்களை செய்தாலும் அவருடைய மகிமைக்கு என்றும் அவருக்காகவும் செய்யுங்கள், உலகத்துக்கும் உங்கள் சுய தேவைக்காக மாத்திரம் செய்யாதீர்கள். நீங்கள் கடவுளிடம் பெற்றுக்கொண்ட அல்லது பெற்றுக் கொள்ளப் போகிற ஒன்றை அவருடைய மகிமைக்குப் பயன்படுத்துங்கள், ஒருவேளை கஷ்டம் வந்தாலும் கடவுளை விட்டு விலகாமல் யோபுவை போல பொறுமையோடு இருங்கள் இழந்தது எல்லாம் இரண்டு மடங்காக திரும்ப வரும்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE