நம்மில் பலருக்கும் உயர் வகையான வாகனம் வாங்கி ஓட்டவேண்டும் என்ற கனவு உண்டு. அது எவ்வளவு விலை உயர்வாகயிருந்தாலும் அதற்காக பலர் கடுமையாக உழைத்து சம்பாதித்து அவ்வாகனத்தை வாங்கினது உண்டு என்பது மறுக்கப்படமுடியாத உண்மை. அப்படியாக நீங்கள் வாங்கின அந்த வாகனம் ஒரு குறிப்பிட்ட நாட்களில் பழுது ஒன்று ஏற்பட, அதை உபயோகப்படுத்த இயலாத சூழ்நிலையில் அதை எங்கே எடுத்துக்கொண்டு செல்வோம்?
வாகனத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பொருள் வேலைசெய்யாத நிலையில் அதை மெக்கானிக் கடைக்கு எடுத்துச்செல்வதற்கு பதில், அதை வாங்கின கடைக்கு எடுத்துச்செல்வோம். ஏனென்றால் நமக்கு தெரியும், அதை யாரோ ஒருவரிடம் எடுத்துச்செல்வதற்கு பதில் அதை உருவாக்கியவரிடம் எடுத்துச்செல்வது மேலானது என்று. உருவாக்கிய மனிதருக்கு மட்டும் தான் தெரியும் பிரச்சனை எதனால் வந்தது என்றும், மேலும் அதற்கான பதிலும் அவரால் மட்டும்தான் எளிதானமுறையில் கொடுக்கமுடியும்.
வேதம் சொல்கிறது, “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்” என்றும், “என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்ப்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது”. எனவே நம்மை ஆரம்பமுதல் உருவாக்கின நம் தேவாதி தேவனுக்கு மட்டுமே நம்மை பற்றின முழுமையான காரியங்கள் தெரியும். ஆதலால், பிரச்சனைகள் வரும்பொழுது யாரோ தெரிந்த ஒரு நபரிடம் செல்வதை விட்டுவிட்டு நம்மை படைத்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிடம் செல்வது தான் சரியானமுறை. நம் வாழ்க்கையில் எந்தவொரு பிரச்சனை, சரீரக்குறைபாடுகள் ஏற்பட்டாலும் நம்மை படைத்த தேவனிடம் போவோம், அதற்குரிய தீர்வை அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளுவோம்!