சபையும் குடும்பமும் உடைந்துபோவதின் காரணம் இவன் தான்!

நூறு கருப்பு எறும்புகளையும், நூறு சிகப்பு எறும்புகளையும் பிடித்து ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டுவைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து பார்த்தால் எல்லா எறும்புகளும் அமைதியாக அங்கும் இங்கும் உலாவுவதாய் காணப்படும். அது அது அதன் வேலைகளை பார்த்துக்கொண்டு இருக்கும். அங்கே சண்டை, பிரச்சனைகள் என எதுவும் வராமல் அமைதியாக இருக்கும். அப்போது நீங்கள் அந்த ஜாடியை எடுத்து நன்றாய் குலுக்கிவிட்டு மேஜையில் வைத்தீர்களானால், என்ன நடக்கும் என்று தெரியுமா? நீங்கள் குலுக்கிய வேகத்தில், ஒன்றும் புரியாத அந்த எறும்புகள் ஒன்றுக்கொன்றுத் தாக்கி, ஒன்றுக்கொன்று கொல்ல ஆரம்பிக்கும். சிவப்பு எறும்பு கருப்பு எறும்பை எதிரியென்றும், கருப்பு எறும்பு சிகப்பு எறும்பை தன் எதிரியென்றும் நினைத்து சண்டைப்போட்டு கொள்ளும். ஆனால் அங்கே உண்மையான எதிரி யார்? அந்த ஜாடியை குலுக்கியவர் மட்டுமே. ஆனால் அந்த எறும்புகளுக்கு தெரியாது யார் ஜாடியை குலுக்கிய அந்த எதிரி என்று. அது தெரிவதற்கும் வாய்ப்பில்லை. ஆனால் அந்த உண்மையான எதிரி, அந்த ஜாடியை குலுக்கிவிட்ட நபர் சந்தோஷமாக உட்கார்ந்து, அந்த எறும்புகள் ஒன்றுக்கொன்று கொலைசெய்து கொண்டிருப்பதை பார்த்து ரசித்துக்கொண்டிருப்பார்.

இதேபோலத்தான் குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக இணைந்து சந்தோஷமாக நாட்களை கடந்துக்கொண்டு வெற்றியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும்போது, மேலும் நம் சபைகளில் ஒற்றுமையாக இணைந்து ஒரே அபிஷேகத்தோடே தேவனின் ராஜ்யத்தைக்கட்டிக்கொண்டிருக்கும் நேரத்தில், எதிரியானவன் வெளியே இருந்து குடும்பத்தை, நம் சபையை ஒரு குலுக்கு குலுக்கிவிடுவான். யார் குலுக்கிவிட்டார் என்பதை அறியாத நாம் நமக்குள்ளே ஒருவருக்கொருவர் மனஸ்தாபங்களை ஏற்படுத்திக்கொண்டு, சண்டையிட்டு, அங்கே இருந்த ஒருமனதை குலைத்து, முன்னோக்கிப்போய்க்கொண்டிருந்த நம்மை புலம்பவைத்து பார்த்து சந்தோஷப்படுவான் அந்த எதிரியானவன்.

நாம் நம் குடும்பத்தோடும் சபையாரோடும் ஒருமனதாக இணைந்து நிற்கவேண்டும். இல்லையேல் வேதம் சொல்லுகிறது, “உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” என்று. நாம் நம்முடைய ஒருமனத்தில் சிறிதும் இடைவெளிவிட்டால் அவன் உடனே அதற்குள்புகுந்து நம்மை காட்சிப்பொருள்களாய் ஆக்கிவிடுவான். ஆதலால் நம்முடைய குடும்பத்திலும், நம்முடைய சபையிலும் எதிரியானவனுக்கு இடம்கொடுக்காத அளவில் ஒருமனதோடு இணைந்து செயல்படுவோம்! தேவனுடைய ராஜ்யத்தை கட்டுவோம்!

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE