உங்க அப்பாக்கும் உங்க நண்பரின் அப்பாக்கும் இதுமட்டும் தாங்க வித்தியாசம்!

பள்ளிப்பருவத்தில் நம் அப்பாவை பற்றி நண்பர்களிடம் சொல்லுவதில் நம் எல்லாருக்கும் ஒரு சந்தோசம் உண்டு. சில நேரத்தில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் பணமுள்ளவர் பணமில்லாதவர் என வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அதை சமாளித்து அதற்குத்தக்கதாக பேசி நண்பர்களை தக்கவைத்துக்கொண்டதில் நம்மைப்போல் யாருமில்லை என்று மார்தட்டிக்கொள்ளலாம். ஆனால் அப்பா ஒன்று நமக்கு
வாங்கிக்கொடுக்கும்போது அதை பெற்றுக்கொண்ட சந்தோசத்தைக்காட்டிலும் மறுநாள் பள்ளிக்கு சென்று நண்பர்களிடம் அதை காட்டும் போதுதான் அந்த பொருளை பெற்ற சந்தோசம் முழுமையடைந்தது நமக்கு.

நாம் நம் அப்பாவை பற்றி சொல்லும் போது நண்பரும் அவர் அப்பாவைப்பற்றி சொல்லுவது வழக்கம். நம் அப்பா வேலைக்கு செல்வதுபோல அவர் அப்பாவும் ஒரு இடத்தில் வேலைக்கு செல்வார், நம் அப்பா வாகனம் வைத்திருப்பதுபோல அவரும் வைத்திருப்பார். நம் அப்பா நமக்கு வாங்கிக்கொடுப்பதுபோல நண்பனுக்கும் அவர் அப்பா வாங்கிக்கொடுப்பார். சுற்றி பார்த்தால் எல்லாமே ஒரேமாதிரி தான் இருக்கும். நம் அப்பாவை போலவே காணப்படுவார். ஆனால் நம் அப்பாவை போல் நண்பரின் அப்பா நம்மை பார்த்து கொள்வாரா? என்பது தான் சிந்திக்கவேண்டிய விஷயம்.

ஒரு சிறுபிள்ளை தடுமாறி கீழே விழும்போது அங்கிருக்கும் பக்கத்து வீட்டுக்காரர் ஓடிவந்து பிள்ளையை தூக்கி, தூசி தட்டிவிட்டு பார்த்து நட என்று சொல்லி, அவர்கள்வேலை முடிந்துவிட்டது என அங்கிருந்து கடந்துபோய்விடுவார். அதே நேரத்தில் அங்கே பிள்ளையின் அப்பா இருந்திருந்தால், ஓடி வந்து பிள்ளையை தூக்கிவிட்டு தூசியைத்தட்டிவிட்டு அப்படியே அனைத்துக்கொள்வார். அக்குழந்தையின் கண்ணீரை துடைத்துவிட்டு, அழுகையை நிறுத்தும்வரை தோளில்போட்டு சுமப்பார். அது தான் நம்மைபெற்ற தந்தைக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

இஸ்ரவேல் ஜனங்கள் தேவனின் பிள்ளைகளையிருந்தபடியால் அவர்கள் நடந்துவந்த வனாந்திரபாதை முழுவதும் ஒரு தகப்பன் தன் பிள்ளையை சுமந்துவருகிறதைப்போல சுமத்துவந்தார் என்று வேதத்தில் பார்க்கின்றோம். இன்றைக்கும் நீங்கள் சென்றுகொண்டிருக்கும் உங்கள் சூழ்நிலையில், இந்த இந்த மனிதர்கள் நமக்கு உதவிசெய்வார்கள் என்று நினைத்தால், நீங்கள் புரிந்துகொள்ளவேண்டியது நம் தகப்பனுக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் உண்டு. மற்றவர்களில் சிலர் உதவி செய்வார்கள், விட்டு சென்று விடுவார்கள். ஆனால் தேவன் உதவிசெய்தும் அதினால் ஏற்படுகின்ற இழப்புகள் கண்ணீர்கள் என அனைத்து சூழ்நிலையிலும் உங்களை மார்பிலே கட்டியணைத்தவராய் உங்களோடுகூடவே இருப்பார். அதனால் சூழ்நிலையைக்கண்டு பயப்படாதேயுங்கள் உங்கள் தகப்பனான தேவன் உங்களோடிருக்கிறார்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE