விளையாட்டில் விபரீதம்! நம்மை எச்சரிக்கும் உண்மை சம்பவம்!

வடதமிழகத்தை சேர்ந்த ஒரு நபர் ரூபன். ஓட்டுநராக பணிபுரிந்த அவருக்கு மனைவி மற்றும் ஒரு சிறு பையன் உண்டு. நன்றாக பாசத்தோடு குடும்பத்தை கவனிக்கும் அவருக்கு வலிப்பு நோய் அவ்வப்போது அதாவது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஏற்படும். உடனே அதற்கேற்ற மருந்துகளை கொடுத்து அவரை சரிபடுத்துவர் அவரின் குடும்பத்தினர். சிலநேரம் கார் ஓட்டிக்கொண்டிருக்கும் போது கூட வலிப்புநோய் வந்ததுண்டு. அப்படியாக பலமுறை ரூபனிற்கு மருத்துவம் செய்துள்ளனர் குடுபத்தினர் மற்றும் அவரின் நண்பர்கள். ரூபனிற்கு விளையாட்டு குணம் அதிகம். தன் குடும்பத்தாரிடம், மனைவியிடம் மற்றும் நேசிக்கும் நண்பர்களிடம் அடிக்கடி விளையாட்டுக்காட்டுவது அவரின் கெட்ட பழக்கமாகும். தனக்கு வலிப்புநோய் வரும்பொழுது குடும்பத்தினர் எப்படி கவனிக்கிறார்கள் என்று சோதிப்பதற்காக அடிக்கடி விளையாடுவார் வலிப்புநோய் வந்ததுபோல். அதற்காக அப்படிசெய்யக்கூடாது என்று அவருக்கு அடிக்கடி அறிவுரைகள் வழங்கப்பட்டது. ஆனாலும் அதை பெரிதாக எண்ணுவதில்லை ரூபன். பலமுறை குடும்பத்தினர் ஏமாந்துபோனாலும் சிலமுறை உண்மையாகவே வலிப்புநோய் வந்து கஷ்டப்படுவார்.

ஒருநாள் அவர் மனைவி கிராமத்திலிருக்கும் கிணற்றிற்கு துணி துவைப்பதற்காக சென்றுள்ளார். விடுமுறையில் இருந்த ரூபனும் மனைவியோடு சென்றிருக்கிறார். கிணற்றின் கடைசிப்படியில் மனைவி உட்கார்ந்து துவைக்க, அதற்கு மேல்படியில் ரூபன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென அவர் கிணற்றிற்குள் விழுந்தார். விழுந்ததை பார்த்தும், தண்ணீரில் பயங்கர இரைச்சல்கள் கேட்டும் மனைவி அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. விளையாட்டைக் குறைத்துக்கொள் என்று கத்திய மனைவி துவைப்பதில் கவனம் காட்டினாள். தண்ணீரில் இரைச்சல் நின்றது, ஆனாலும் கணவன் வெளியே வராததை கண்ட மனைவி சத்தமிட்டு, பிறர் உதவியுடன் ரூபனை வெளியே எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க ரூபன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர். அவர் எப்பொழுதும் விளையாடும் அந்த விளையாட்டு கடைசியில் அவரின் உயிரை எடுத்துவிட்டது.

இதை பார்க்கும்பொழுது புலி வருகிறது புலி வருகிறது என்று ஏமாத்திய ஒரு மேய்ப்பன், ஒரு நாள் உண்மையாகவே புலி வந்தும் மக்கள் அவனை நம்பாததினால் அவன் ஆடுகளையெல்லாம் புலி அடித்து தின்றுவிட்டுச்சென்ற அந்த கதை உங்களுக்கு நினைவில் வரும் என்று நம்புகிறேன். வேதத்தில் பார்க்கிறோம், “மூடனை உரலில்போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாக குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனைவிட்டு நீங்காது” என்றும், “மூடனுடைய வாய் அவனுக்கு கேடு, அவன் உதடுகள் அவன் ஆத்துமாவுக்கு கண்ணி”, மேலும் “மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள்” என்றும், “மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும்” என்றும் பார்க்கிறோம். நாம் இந்த வசனத்தில் வரும் மூடர்களை போல அல்லாமல் ஞானிகளைப்போல் வாழுவோம். மூடத்தனம் மனிதர்களுக்கு மட்டுமல்ல ஆண்டவருக்கும் அருவறுப்பானது. நாம் பேசும் வார்த்தை, நம்முடைய செயல்கள், நாம் போகின்ற இடங்கள் என எப்பொழுதும் எங்கேயும் ஞானவான்களாய் இருக்க கடமைப்பட்டிருக்கிறென்றோம்!

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE