உங்களை அவர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

அத்தனை வருடங்கள் அரண்மனையில் அமைதியாக இருந்த மோசே தன் நாற்பதாவது வயதில் தான் தன் வாழ்க்கையின் நோக்கத்தையே தெரிந்துக் கொண்டான்,ஆனால் தன் நோக்கத்தை தெரிந்துக் கொண்ட மோசே அதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை அறியாமல் இருந்தான் எனவே ஒன்றும் செய்ய முடியாமல், வேறு வழியும் தெரியாமல் வனாந்திரத்திற்கு ஓடிப் போனான். இத்தனை வருடங்கள் அமைதியாக இருந்த தேவன் அவனது எண்பதாவது வயதில் அவனைத் தேடி வந்தார், இன்று
எண்பது வயது என்பது எல்லாம் முடிந்த ஒரு கிழவனின் வயது, அன்று அரண்மனையில் இளவரசனாக இருந்த போதும், வாக்கில் வல்லவனாக இருந்த போதும் பயன்படுத்தாத தேவன், இப்போது திக்கு வாயும் மந்த நாவுமாக இருக்கும் இந்த மனிதனை கொண்டு என்ன செய்ய முடியும்??? உண்மை தான் ஆனால் மனிதனால் கூடாதது தேவனால் கூடும்.

நாற்பது வயதில் தன்னுடைய வாழ்க்கையின் நோக்கத்தை புரிந்துக் கொண்ட மோசேவிற்கு அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்க இன்னும் ஒரு நாற்பது ஆண்டு தேவைப்பட்டது, காரணம் முதல் நாற்பது வருடம் அரண்மனை கோவத்தையும், வேகத்தையும் மட்டுமே கற்றுக் கொடுத்தது ஆனால் வனாந்திரம் தான் பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் கற்றுக் கொடுத்தது.

இஸ்ரவேல் ஜனங்களுக்கு அவனை ஒரு தகுதியான தலைவனாக மாற்றின இடம் அரண்மனை அல்ல வனாந்திரம், அதன் பிறகு தான் எந்த இடத்திலிருந்து ஒரு அவமானச் சின்னமாக ஓடி வந்தானோ அதே இடத்திற்கு தேவனின் பிரதிநிதியாக நுழைகிறான், வெற்றியும் அடைகிறான்!!!

இதை படித்துக் கொண்டிருக்கும் நீங்களும் கூட எல்லா தகுதியும் திறமையும் இருந்தும் இன்னும் தேவன் வாசல்களை திறக்கவில்லையே என்று சோர்ந்துப் போய் நம்பிக்கை இழந்து நிற்கலாம்… ஆனால் இன்னும் உங்களை அவர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்!!!

காலம் முடிந்துவிட்டது, நேரம் கடந்துவிட்டது என்று சோர்ந்துப் போய்விடாதீர்கள், காலத்தை கரத்தில் வைத்திருக்கும் தேவனுக்கு காலமும் நேரமும் ஒரு தடையே இல்லை.

அவரின் தாமதம் தோல்வியும் அல்ல, அவரின் தடைகள் முடிவும் அல்ல, எல்லாம் ஒரு பெரிய ஆரம்பத்திற்கான ஆயத்தமே!!!

-ebenezer Facebook

(Visited 34 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE