கூகுளை விட இது பெருசா?

கூகுள் வலைதளம் நாம் அனைவரும் உபயோகப்படுத்தும் ஒன்று. ஒரு சிறிய காரியம் என்றாலும் கூட உடனே கூகுள் க்குள் சென்று தேடுகிறோம் அதே போல அதற்கான பதிலையும் பெற்று கொள்கிறோம். ஏனென்றால் உலகத்தில் உள்ளவைகள் அனைத்தும் கூகுள் என்ற வலையத்தளத்திற்குள் உள்ளது. உலகத்தில் நாம் எங்கே வேண்டுமானாலும் போகலாம் கூகுள் கையில் எடுத்துக்கொண்டு. அந்த வகையில் நாம் அனைவரும் கூகுளை சார்ந்து வாழ்கிறோம்.

அனால் சில நேரம் கூகுள் நமக்கு தப்பான மற்றும் பல நேரம் நமக்கு தோராயமான தகவல்கள் மட்டுமே தரும். எடுத்துக்காட்டாக, சரீரக்குறிப்புகள் கேட்டால், அதை குறித்த தகவல்கள் மட்டும் தருமே தவிர அதில் தீர்வு நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு கிடைக்காது. அது தான் கூகுள் வெறும் தகவல்களை மட்டும் தருவதற்கு. அனால் அதை விட மேலானது வேதாகமம். நாம் தேடும் காரியங்களுக்கு பதிலும் தீர்வும் உண்டு அதே நேரத்தில் அதில் வாழ்வு உண்டு.

வேறுநாட்டு தூதுவர் ஒருமுறை இங்கிலாந்தின் ராணியான விக்டோரியா அவர்களிடம் கேட்டார்,”உங்கள் நாடு மற்ற நாடுகளை காட்டிலும் இவ்வளவு சக்திவாய்ந்ததாக சிறந்திருக்க காரணம் என்ன என்று?” அதற்கு ராணி சொன்ன பதில்,”எங்கள் நாட்டின் ராணுவமோ அல்லது பொருளாதாரவலிமையோ அல்ல என்று சொல்லி தன் கையில் இருக்கும் வேதத்தைக்காட்டி நீ போய் சொல் உன் இளவரசனிடம் இந்த வேதம் தான் இங்கிலாந்தின் பலம் என்று”. வேதம் ஒருவரை பலமுள்ளவனாக மாற்றி புது வாழ்வை கொடுக்கும் வலிமை உடையது. எந்த சூழ்நிலையில் வேதத்தை எடுத்து வாசித்தாலும் அந்த நேரத்திற்கு ஏற்றதாய் நம்மிடம் பேசும் ஜீவன் கொண்டது வேதம். “வேதத்திலே வேதத்திலே விலை மதியாத முத்துகளுண்டு, தினந்தோறும் நீ அம்முத்துக்களை பார் உண்மையாகவே நீ முத்தாய் மாறுவாய் ” என்று ஒரு பழைய பாடலும் உண்டு. தினந்தோறும் மறவாமல் வாழ்வு கொடுக்கும் அந்த முத்துக்களை பாருங்கள் ஆசிர்வாதமாய் இருங்கள்!

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE