கோழிக்கு இப்படியும் ஒரு குணாதிசயம் உண்டா?

ஒரு விவசாயி கோழியொன்றை வளர்த்து வந்தார். அந்த கோழி முட்டையிட்டு குஞ்சுகள் பொரித்தது. தினமும் அந்த குஞ்சுகளோடு உணவு தேடி சாப்பிட்டு வந்தது. விவசாயிக்கு எந்த தொல்லையும் கொடுக்காத அந்த கோழியும் குஞ்சுகளும் சந்தோஷமாக வளர்ந்து வந்தன. ஒருநாள் விவசாயி வயலுக்கு சென்றுவிட்ட நிலையில், அந்த கோழியும் குஞ்சுகளும் தங்கியிருக்கும் குடிசையில் தீப்பற்றியெரிய ஆரம்பித்துவிட்டது. அத்தீயை அனைத்துவிட அங்கு யாரும் இல்லை. கோழியால் தன் குஞ்சுகளோடு வெளியேவர முயன்றும் அதிக தீயினால் வெளியே வர முடியவில்லை. சிலமணி நேரங்கள் கழித்து அங்கே கூடின விவசாயி மற்றும் அங்குள்ள ஜனங்கள், தீயினால் கருகிப்போன அந்த குடிசையை பார்த்துக்கொண்டிருந்தார்கள். மேலே கருகிக்கிடந்த கூரையை அகற்றும்போது அங்கே அந்த கோழி கருகி நிற்கிறதை ஜனங்கள் பார்த்தார்கள். திடீரென்று அந்த கோழிக்குள் இருந்து சத்தம்வரவே கோழியை தூக்கிப்பார்த்தார் விவசாயி. அங்குகூடி நின்ற அனைத்து ஜனங்களுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. தீப்பற்றியெரிந்ததை கண்ட அக்கோழி தன் குஞ்சுகளை கூட்டி தன் செட்டைக்குள்ளே அணைத்து வைத்துக்கொண்டது. தனக்கு என்ன நேரிட்டாலும் பரவாயில்லை தன் குஞ்சுகளுக்கு ஏதும் ஆகக்கூடாது என்று குஞ்சுகளை காப்பாற்றுவதற்காக தன் உயிரை அந்த தீயில் விட்டது. கோழி எரிந்தும் தன் குஞ்சுகளை அந்த கொடிய தீயிற்கு இரையாக்காமல் காப்பாற்றிவிட்டது.

அந்த கோழிக்கு இருக்கிற வைராக்கியத்தை பாருங்கள், அதன் வலிமையை பாருங்கள். தன் குஞ்சுகளை பற்றி நினைக்கும்போது தீயும் தன் சரீரத்தையும் ஒரு பொருட்டாக கருதவில்லை. வேதத்தில் பார்க்கிறோம், தேவன் சொல்கிறார்,”கோழி தன் குஞ்சுகளை செட்டையின்கீழ் அணைப்பதுபோல் நான் உங்களை சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்” என்று. அந்த தீ போன்ற பயங்கரமான பிரச்னையின் மத்தியில் நீங்கள் நின்றாலும் நம் ஆண்டவரின் வலிமை அக்கோழியை விட பன்மடங்குகள் அதிகம். அவர் சிருஷ்டித்த அக்கோழியே தன் குஞ்சுகளை இவ்வளவு கருத்தாய் பாதுகாக்கும் போது ஆண்டவர் நம்மை எவ்வளவு அதிகமாய் பாதுகாப்பார்!

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE