இந்த மாதிரி ஒரு விசித்திர குதிரையை பார்த்திருக்கீங்களா?

குதிரையை பற்றி நீங்கள் எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். குதிரைக்கு என்று பல தனிப்பட்ட விசேஷங்கள் உண்டு. குதிரை வேகமாக ஓட கூடியது. அழகான ஒரு விலங்கு குதிரை. சில நபர்கள் குதிரையை வாங்கி அதை பழக்குவித்து கடற்கரை போன்ற பல பகுதிகளில் ஜனங்களை குதிரையில் ஏற்றி பணத்திற்காக சுற்றிவருவது வழக்கம். அதையே தங்கள் தொழிலாக கொண்டிருப்பவர்களும் உண்டு நம் நாட்டில். அதை போல ஒரு மனுஷன் குதிரை வாங்கி தொழில் செய்ய ஆசைப்பட்டு, குதிரை விற்பவரிடம் சென்றான். குதிரையை விற்பவர் ஒரு விசேஷ குதிரையை காட்டினார். இந்த குறிப்பிட்ட குதிரையை வார்த்தையின் மூலமாக பழக்கியிருப்பதாக சொன்னார். அந்த வார்த்தைகளை கேட்டவுடன் வாங்குபவருக்கு மிகுந்த மகிழ்ச்சி.

அவர் சொன்னார் “அல்லேலூயா” என்று சொன்னால் அந்த குதிரை ஓடும். “ஆமென்” என்று சொன்னால் அந்த குதிரை நிற்கும் என்று. வார்த்தையின் மூலமாய் இதை இயக்கலாம் என்று கேள்விப்பட்டபோது வாங்குபவருக்கு பயங்கர மகிழ்ச்சி. சந்தோஷத்தோடு வாங்கி கொண்டு சென்ற அவர், வேகமாக குதிரையை காட்டுப்பகுதிக்குள் ஓட்ட ஆரம்பித்தார். வேகமாக ஓடிக்கொண்டிருந்த குதிரையை இன்னும் அதிவேகமாக ஓட விட்டார். குதிரை கட்டுக்குள் இல்லாமல் வேகமாக தாறுமாறாய் ஓட பெரிய பள்ளத்தாக்குக்கு நேராக ஓடியது. அதிர்ந்துபோன இவர் குதிரையை நிறுத்தக்கூடிய அந்த “ஆமென்” என்ற வார்த்தையை பயத்தில் மறந்துவிட்டார். எவ்வளவு முயற்சித்தும் அவரால் அந்த வார்த்தையை நினைவுக்கு கொண்டுவர முடியவில்லை. நில் என்கிறார், காலால் தட்டி நிறுத்து என்று கத்துகிறார் ஆனால் குதிரையோ ஆமென் என்கின்ற வார்த்தையை கேட்காததினால் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருந்தது.

குதிரை அந்த பள்ளத்துக்குள் விழப்போகுது, நாம் சாக போகிறோம் என்று முடிவு பண்ணின அவர் ஜெபித்தார், “ஆண்டவரே நான் இன்று மரித்தால் உன் சமூகத்திற்கு வந்து விடனும், ஆமென்” என்று. அந்த ஆமென் வார்த்தையை கேட்ட குதிரை அந்த பள்ளத்தின் நுனிப்பகுதியில் வந்து நின்றது. இன்னும் ஒரு கால் எடுத்துவைத்தால் பள்ளத்துக்குள் விழுந்து விடுவார்கள். தான் கடைசி நொடியில் உயிர் பிழைக்கப்பட்டேன் என்று உணர்ந்த அந்த நபர் சந்தோஷத்தில் ஆண்டவருக்கு நன்றி சொல்ல அல்லேலுயா என்று கத்தினார். மறுபடியும் அந்த குதிரை ஓட ஆரம்பிக்க இருவரும் பள்ளத்துக்குள் விழுந்துவிட்டார்கள்.

பலமுறை நாமும் வார்த்தையின் பலத்தை அறியாமல் கோபத்தில், சந்தோஷத்தில், வருத்தத்தில் இருக்கும்போது உணர்ச்சிவசப்பட்டு பேசிவிடுகின்றோம். “நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாத்தை பேசும்” என்று வேதத்தில் பார்க்கிறோம். எவ்வளவு உணர்ச்சிவசப்பட்டாலும் நம்முடைய நாவு ஞானத்தை பேசட்டும். இல்லையேல், காரணமில்லாமல் பேசுகின்ற வார்த்தை நம்மிடம் திரும்பி வந்து விடும் என்பதை மறந்துவிடக்கூடாது. இந்த நாளில் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் பிறர் காயம் ஆற்றுவதாக இருக்கட்டும். வார்த்தையின் பலத்தை உணர்ந்து பிறரிடம் பேசுவோமாக.

Misba Abraham

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE