வீடு எந்த திசையைப் பார்த்து இருக்கனும்? (மருத்துவர்களின் அறிவுரை)

சிறுவயதிலிருந்தே எல்லாருக்கும் ஒரு ஆசை இருக்கும், நான் பெரியவராகி சொந்தமாக வீடு கட்டுவேன் என்று. அப்படியாக வீடுக்கட்டி சாதித்தவர்கள் அநேகர் உள்ளனர். இதில் வீடுகளை கட்டும்போது அவர்களுடைய ராசி நட்சத்திரங்களை வைத்து வீட்டின் வாசல் வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு என அமைத்துக்கொள்ளுவார்கள் என்பது நாம் அறிந்த உண்மை. ஆனால் ரசிநட்சத்திரங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் எந்த திசை வசதியாக இருக்கிறதோ அங்கே வாசல் பகுதியை வைத்துக்கொள்ளுவார்கள்.

எந்த திசையில் வாசல் வைக்கிறோம் என்பது பிரச்சனையில்லை. ஆனால் மருத்துவ அறிவுரையின்படி நம் வீட்டின் வாசலும் வீட்டின் ஜன்னலும் நேருக்கு நேராக இருக்கவேண்டும். மருத்துவர்களின் அறிவுரை என்னவென்றால், “வாசலில் நுழையும் காற்று நேராக இருக்கும் ஜன்னல் வழியாய் வெளியேசெல்லவேண்டும். அல்லது, ஜன்னல் வழியாய் நுழையும் காற்று வாசலின் வழியாய் வெளியே செல்ல வேண்டும். அங்கே காற்று தேங்கிவிடாமல், சுத்தமில்லாதக்காற்று உடனுக்குடனே வெளியே செல்லும் வகையில் வீட்டின் வாசலும் ஜன்னலும் நேருக்குநேர் அமைந்திருக்க வேண்டும்” என்று.

வாழ்க்கையில் பலமுறை வெற்றிகளை சந்திக்கின்றோம். பலமுறை தோல்விகளை சந்திக்கின்றோம். வெற்றிகளை சந்திக்கும் போது நம்மை அறியாமல் ஒரு வித பெருமை, சந்தோசத்தின் உச்சக்கட்டம் ஏற்படுகின்றது. அதேபோல தோல்விகளை சந்திக்கும் போது மனசோர்வு, வெறுப்பு, நமக்கு நம் மேலேயே ஒரு அதிருப்தி ஏற்படுகின்றது. எப்படி சுத்தமில்லாத்தக்காற்றை உடனே வீட்டிலிருந்து வெளியேற்ற நினைக்கிறோமோ அதன்படியே, அந்த பெருமைகளை, மனசோர்வுகளை, அதிருப்திகளை உடனுக்குடன் நம் மனதிலிருந்து வெளியே நீக்கிப்போடவேண்டும். அப்போது தான் வீட்டிற்குள்ளும் வாழ்க்கைக்குள்ளும் அடுத்தடுத்து வெற்றிகளையும் மேன்மைகளையும் பெற்றுக்கொண்டே செல்லலாம். வெற்றிபெறும் போது தேவனுக்குள் மேன்மைபாராட்டுவோம், தோல்வியடையும் போது தேவனுக்குள் நம்மை பெலப்படுத்திக்கொள்ளுவோம்!

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE