இதுதான் மைப்பேனாவிற்கும் நம் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு!

பள்ளிப்பருவத்திலிருந்து மை நிரப்பி பயன்படுத்தும் பேனாவை (Ink Pen)  நாம் பயன்படுத்தியிருக்கின்றோம். அந்த வகை பேனா நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. ஏனெனில் அதில் எழுதும் போது கையெழுத்து அழகாய் வரும் என்பது ஒரு வகையான நம்பிக்கை. அந்த பேனாவின் ஒரு வகையான சிறப்பம்சம் என்னவென்றால், பேனா ஒன்று தான் ஆனால் நமக்கு தேவையான நிறத்தின் மையை நிரப்புவதன் மூலம் நமக்கு தேவையான வகையில் பயன்படுத்திக்கொள்ளலாம். நாம் ஊதா நிறத்தில் மை நிறைத்துவிட்டு, எனக்கு கருப்பு நிறத்தில் எழுதவேண்டும் என்று எதிர்பார்த்தால் அது நடக்காத காரியம் என்பதை நாம் நன்றாகவே அறிவோம்.

அதேபோலத்தான் நம்முடைய இருதயமும். நாமும் நம்முடைய இருதயமும் எதினால் நிறைந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்வது அவசியம். எதனால் இருதயத்தை நிறைத்துவைத்திருக்கிறோமோ அது தான் வெளிப்படும் நம்மிடமிருந்து என்பது தவிர்க்கமுடியாத உண்மை. இருதயத்தில் கசப்பு, வெறுப்பு, பொறாமை, தீவினையின் காரியங்கள் என இப்படியாக நிறைத்துவைத்திருந்தால் மற்றவர்களிடம் நாம் பழகும்போது அது தான் வெளிப்படும். “கொடுமையை யோசிக்கும் இருதயம் உள்ளவரின் வாய் தீவினையை பேசும்” என்று நீதிமொழிகளில் பார்க்கிறோம். சிலசமயம் மனதில் கெட்ட எண்ணத்தை வைத்துக்கொண்டு வெளியே நன்றாய் பழகுவதுபோல் சிரித்துபேசலாம். ஆனால் அது நீடிக்காது, ஒருநாள் உண்மையான குணம் வெளியே வந்துவிடும். இயேசு சொல்லும் போது, “விரியன்பாம்புக் குடிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படி பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்” என்று.

“என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்” என்று யோபு புத்தகத்தில் வாசிக்கிறோம். அதனால் தான் தாவீது பாடுகிறார், “தேவனே என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னை சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும்” என்று. மேலும், “கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமூகத்தில் பிரீதியாயிருப்பதாக” என்று. நாமும் அந்தபடியே ஜெபித்து நல்ல எண்ணங்கள், நல்ல காரியங்களால் நம் இருதயத்தை நிறைத்து கொள்வோம், மேலும் அதையே மற்றவர்களிடம் வெளிப்படுத்தி அவர்களுக்கும் ஆசீர்வாதமாயிருப்போம்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE